சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.108   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவிற்குடிவீரட்டம் - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு மைவார்குழலியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=nVPvx8YStx8   Add audio link Add Audio

வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை அருவினை யடையாவே. 

1

களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங் கடிகமழ் சடைக்கேற்றி
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர் பொருகரி யுரிபோர்த்து
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை விற்குடி வீரட்டம்
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார் வருத்தம தறியாரே. 

2

கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்  தாடிய வேடத்தர்
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி விற்குடி வீரட்டம்
பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப் பேணுவ ருலகத்தே. 

3

பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர் பொலிதர நலமார்ந்த
பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு கடலெழு விடமுண்டார்
வேதம் ஓதிய நாவுடை யானிடம் விற்குடி வீரட்டம்
சேரு நெஞ்சினர்க் கல்லதுண் டோபிணி தீவினை கெடுமாறே.

4

கடிய ஏற்றினர் கனலன மேனியர் அனலெழ வூர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளைத் தான்றன தடியவர் மேலுள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினாற் பற்றறும் அருநோயே. 

5
Go to top

பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக் கையினர் மெய்யார்ந்த
அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர்  அரியவர் அல்லார்க்கு
விண்ணி லார்பொழின் மல்கிய மலர்விரி  விற்குடி வீரட்டம்
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக்  கிடர்கள்வந் தடையாவே.

6

இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்தனை யிகலழி தரவூன்று
திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு பொருளினன் இருளார்ந்த
விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி விற்குடி வீரட்டம்
தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத்  துன்பநோ யடையாவே. 

8

செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந் திருவ டியறியாமை
எங்கு மாரெரி யாகிய இறைவனை  யறைபுனன் முடியார்ந்த
வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன் விற்குடி வீரட்டம்
தங்கை யால்தொழு தேத்தவல் லாரவர் தவமல்கு குணத்தாரே. 

9

பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ ராடைய ரவர்வார்த்தை
பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின் பரிவுறு வீர்கேண்மின்
விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில்  விற்குடி வீரட்டம்
கண்டு கொண்டடி காதல்செய் வாரவர் கருத்துறுங் குணத்தாரே. 

10
Go to top

விலங்க லேசிலை யிடமென வுடையவன் விற்குடி வீரட்டத்
திலங்கு சோதியை யெம்பெரு மான்றனை எழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தனற் றமிழ்மாலை
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால் மற்றது வரமாமே. 

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவிற்குடிவீரட்டம்
2.108   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வடி கொள் மேனியர், வான
Tune - நட்டராகம்   (திருவிற்குடிவீரட்டம் வீரட்டானேசுவரர் மைவார்குழலியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000