சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.094   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவாழ்கொளிபுத்தூர் - பியந்தைக்காந்தாரம் கரகரப்பிரியா நவரோசு கன்னடகௌலா ராகத்தில் திருமுறை அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கவண்ணநாதர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=YmmJiHlyF6w   Add audio link Add Audio

சாகை யாயிர முடையார் சாமமு மோதுவ துடையார்
ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்
தோகை மாமயி லனைய துடியிடை பாகமு முடையார்
வாகை நுண்டுளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.

1

எண்ணி லீரமு முடையா ரெத்தனை யோரிவ ரறங்கள்
கண்ணு மாயிர முடையார் கையுமொ ராயிர முடையார்
பெண்ணு மாயிர முடையார் பெருமையொ ராயிர முடையார்
வண்ண மாயிர முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

2

நொடியொ ராயிர முடையார் நுண்ணிய ராமவர் நோக்கும்
வடிவு மாயிர முடையார் வண்ணமு மாயிர முடையார்
முடியு மாயிர முடையார் மொய்குழ லாளையு முடையார்
வடிவு மாயிர முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

3

பஞ்சி நுண்டுகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார்
குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார்
அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையி னீருரி யுடையார்
வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

4

பரவு வாரையு முடையார் பழித்திகழ் வாரையு முடையார்
விரவு வாரையு முடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார்
அரவம் பூண்பது முடையார் ஆயிரம் பேர்மிக வுடையார்
வரமு மாயிர முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

5
Go to top

தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமு முடையார் கோலமும் பலபல வுடையார்
கண்டு கோடலு மரியார் காட்சியு மரியதொர் கரந்தை
வண்டு வாழ்பதி யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

6

மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்
தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த
ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருண் மகளிர்நின் றேத்த
வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

7

ஏழு மூன்றுமொர் தலைகள் உடையவ னிடர்பட வடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார்
கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க
வாழி சாந்தமு முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே

8

வென்றி மாமல ரோனும் விரிகடற் றுயின்றவன் றானும்
என்று மேத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி
முன்றின் மாமலர் வாச முதுமதி தவழ்பொழிற் றில்லை
மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

9

மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர்
குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல
துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடியணிந் தெங்கும்
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே.

10
Go to top

நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்
வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை
இலங்கு வெண்பிறை யானை ஏத்திய தமிழிவை வல்லார்
நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாழ்கொளிபுத்தூர்
1.040   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொடி உடை மார்பினர், போர்
Tune - தக்கராகம்   (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணவீசுரர் வண்டார்பூங்குழலம்மை)
2.094   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சாகை ஆயிரம் உடையார், சாமமும்
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணநாதர் வண்டமர்பூங்குழலம்மை)
7.057   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை
Tune - தக்கேசி   (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணர் வண்டமர்பூங்குழலம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000