காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச் சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான் தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.
|
1
|
சடையிடைப் புக்கொடுங்கி யுளதங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணி அயலே இடையிடைவைத்ததொக்கு மலர்தொத்து மாலை யிறைவன் னிடங்கொள் பதிதான் மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து மணநாறு நீலம் மலரும் நடையுடை யன்னம்வைகு புனலம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள்.
|
2
|
பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபா டிலாத பெருமான் கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை யிடமாய காதல் நகர்தான் வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் விடுபோ தலர்ந்த விரைசூழ் நறுமல ரல்லிபுல்லி யொலிவண் டுறங்கு நனிபள்ளி போலும் நமர்காள்.
|
3
|
குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு தலைமாலை யோடு குலவி ஒளிர்தரு திங்கள்சூடி யுமைபாக மாக வுடையா னுகந்த நகர்தான் குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட பெடைவண்டு தானும் முரல நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகு நனிபள்ளி போலும் நமர்காள்.
|
4
|
தோடொரு காதனாகி யொருகா திலங்கு சுரிசங்கு நின்று புரளக் காடிட மாகநின்று கனலாடும் எந்தை யிடமாய காதல் நகர்தான் வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறிநீர் தெளிப்ப விரலால் நாடுட னாடுசெம்மை யொலிவெள்ள மாரு நனிபள்ளி போலும் நமர்காள்.
|
5
|
Go to top |
மேகமொ டோடுதிங்கண் மலரா அணிந்து மலையான் மடந்தை மணிபொன் ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் ஊகமொ டாடுமந்தி யுகளுஞ் சிலம்ப அகிலுந்தி யொண்பொன் இடறி நாகமொ டாரம்வாரு புனல்வந் தலைக்கு நனிபள்ளி போலும் நமர்காள்.
|
6
|
தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் கொடுகொட்டிவீணை முரல வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்
|
7
|
வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று மதியா வரக்கன் வலியோ டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த பெருமான் உகந்த நகர்தான் நிலமிகு கீழுமேலு நிகராது மில்லை யெனநின்ற நீதி யதனை நலமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்
|
8
|
நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற தொருநீர்மை சீர்மை நினையார் அறவுரு வேதநாவன் அயனோடுமாலு மறியாத அண்ணல் நகர்தான் புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை புனைகொன்றை துன்று பொதுளி நறவிரி போதுதாது புதுவாச நாறும் நனிபள்ளி போலும் நமர்காள்
|
9
|
அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில் இடவுண்டு பட்ட அமணும் மனமிகு கஞ்சிமண்டை யதிலுண்டு தொண்டர் குணமின்றி நின்ற வடிவும் வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான் நனமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யு நனிபள்ளி போலும் நமர்காள்
|
10
|
Go to top |
கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி யென்று கருதப் படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன் இடுபறை யொன்றவத்தர் பியன்மே லிருந்தின் இசையா லுரைத்த பனுவல் நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதலாணை நமதே
|
11
|