விண்ணியங்கு மதிக்கண்ணி யான்விரி யுஞ்சடைப் பெண்ணயங்கொள் திருமேனி யான்பெரு மானனற் கண்ணயங்கொள் திருநெற்றி யான்கலிக் காழியுண் மண்ணயங்கொண் மறையாள ரேத்துமலர்ப் பாதனே.
|
1
|
வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும் பலிவி ரும்பியதொர் கையினான்பர மேட்டியான் கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள் நலிய வந்தவினை தீர்த்துகந்தவெந் நம்பனே.
|
2
|
சுற்ற லாநற்புலித்தோலசைத்தயன் வெண்டலைத் துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான் கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுண் மற்ற யங்குதிர டோளெம்மைந்தனவ நல்லனே.
|
3
|
பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை மல்ல யங்குதிர டோள்களாரநட மாடியுங் கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுட் தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே.
|
4
|
தூநயங்கொடிரு மேனியிற் பொடிப்பூசிப்போய் நாநயங்கொண்மறை யோதிமா தொருபாகமாக் கானயங்கொள்புனல் வாசமார் கலிக்காழியுட் டேனயங்கொண்முடி யானைந்தாடிய செல்வனே.
|
5
|
Go to top |
சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே மொழியி லங்கும்மட மங்கைபாக முகந்தவன் கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுட் பழியிலங்குந்துய ரொன்றிலாப் பரமேட்டியே.
|
6
|
முடியி லங்கும்முயர் சிந்தையான்முனி வர்தொழ வடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங் கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுட் கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே.
|
7
|
வல்ல ரக்கன்வரை பேர்க்கவந் தவன்றோண்முடி கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள் நல்லொ ருக்கியதொர் சிந்தையார்மலர் தூவவே தொல்லி ருக்கும்மறை யேத்துகந்துடன் வாழுமே.
|
8
|
மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும் இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர் வெருவ நின்றதிரை யோதம்வார்வியன் முத்தவை கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே.
|
9
|
நன்றியொன்றுமுண ராதவன் சமண்சாக்கியர் அன்றியங்கவர் சொன்னசொல் லவைகொள்கிலான் கன்றுமேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள் வென்றி சேர்வியன் கோயில்கொண்ட விடையாளனே.
|
10
|
Go to top |
கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள் அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல் வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார் விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே.
|
11
|
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|