விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம் புகலிவெங் குருமேற்சோலை வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம்வண் புறவமண்மேல் களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் கொச்சைகழு மலமென்றின்ன விளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் பகையெறிவித் திறைவனூரே.
|
1
|
திருவளருங் கழுமலமே கொச்சை தேவேந்திரனூர் அயனூர்தெய்வத் தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர் காழிதகு சண்பையொண்பா வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய் தோணிபுர முயர்ந்ததேவர் வெருவவளர் கடல்விடம துண்டணிகொள் கண்டத்தோன் விரும்புமூரே.
|
2
|
வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்வாழூர் ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழிற் காழியிறை கொச்சையம்பொன் வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய மிக்கயனூர் அமரர்கோனூர் ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ தரனாளும் அமருமூரே.
|
3
|
மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப் புகலிதராய் தோணிபுரம்வான் சேமமதில் புடைதிகழுங் கழுமலமே கொச்சைதேவேந் திரனூர்சீர்ப் பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற் சிலம்பனூர் காழிசண்பை பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின் பயன்நுகர்வோர் பரவுமூரே.
|
4
|
தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி வயங்கொச்சை தயங்குபூமேல் விரைச்சேருங் கழுமலமெய் யுணர்ந்தயனூர் விண்ணவர்தங் கோனூர்வென்றித் திரைச்சேரும் புனற்புகலி வெங்குருச் செல்வம்பெருகு தோணிபுரஞ்சீர் உரைச்சேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவ முலகத்தி லுயர்ந்தவூரே.
|
5
|
Go to top |
புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு சிரபுரம்பூங் காழிசண்பை எண்டிசையோ ரிறைஞ்சியவெங் குருப்புகலி பூந்தராய் தோணிபுரஞ்சீர் வண்டமரும் பொழின்மல்கு கழுமலநற் கொச்சைவா னவர்தங்கோனூர் அண்டயனூ ரிவையென்ப ரருங்கூற்றை யுதைத்துகந்த வப்பனூரே.
|
6
|
வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங் கோனூர்வண் புகலியிஞ்சி வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு சண்பைவியன் காழிகொச்சை கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந் தோணிபுரம் பூந்தராய்சீர்ப் பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம் பால்வண்ணன் பயிலுமூரே.
|
7
|
மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர் காழிமூதூர் நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை வேணுபுரங் கமலநீடு கூடியவ னூர்வளர்வெங் குருப்புகலி தராய்தோணி புரங்கூடப்போர் தேடியுழ லவுணர்பயி றிரிபுரங்கள் செற்றமலைச் சிலையனூரே.
|
8
|
இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்றன்னூர் நிரக்கவரு புனற்புறவ நின்றதவத் தயனூர்சீர்த் தேவர்கோனூர் வரக்கரவாப் புகலிவெங் குருமாசி லாச்சண்பை காழிகொச்சை அரக்கன்விற லழித்தருளி கழுமலமந் தணர்வேத மறாதவூரே.
|
9
|
மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங் கொச்சையிந் திரனூர்மெய்மை நூலோது மயன்றனூர் நுண்ணறிவார் குருப்புகலி தராய்தூநீர்மேல் சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ் சிலம்பனூர் செருச்செய்தன்று மாலோடு மயனறியான் வண்காழி சண்பைமண்ணோர் வாழ்த்துமூரே.
|
10
|
Go to top |
ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர் கொச்சைகழு மலமன்பானூர் ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமொண் புறவநண்பார் பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர் புகலிவெங் குருவுமென்பர் சாக்கியரோ டமண்கையர் தாமறியா வகைநின்றான் றங்குமூரே.
|
11
|
அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய் தோணிபுர மணிநீர்ப்பொய்கை புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர் புகழ்க்காழி சண்பைதொல்லூர் மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம் வேணுபுர மயனூர்மேலிச் சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் றான்சொன்ன தமிழ்தரிப்போர் தவஞ்செய்தோரே.
|
12
|
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
|
1.063
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.127
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.128
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) )
|
2.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|