பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை அரன்மன்னு தண்காழி கொச்சைவய முள்ளிட்டங் காதி யாய பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலநாம் பரவு மூரே.
|
1
|
வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந் தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழி கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங் காணிய வையகத்தா ரேத்துங் கழுமலநாங் கருது மூரே.
|
2
|
புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி நிகரில் பிரமபுரங் கொச்சைவய நீர்மேல் நின்ற மூதூர் அகலிய வெங்குருவோ டந்தண் டராயமரர் பெருமாற் கின்பம் பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே.
|
3
|
வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத் தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர் கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே.
|
4
|
தொன்னீரிற் றோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்பன் நகரா நல்ல பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலநாம் புகழு மூரே.
|
5
|
| Go to top |
தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமு னாண்ட வண்ண னகர்கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுர மேலா லேந்து கண்ணுதலான் மேவியநற் கழுமலநாங் கைதொழுது கருது மூரே.
|
6
|
சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவொ டந்தண் காழி ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கிப் பேரா னெடியவனு நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே.
|
7
|
புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர் விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து திறலா லரக்கனைச் செற்றான்றன் கழுமலநாஞ் சேரு மூரே.
|
8
|
சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் காழி சாயாப் பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல் நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுர நாணி லாத வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே.
|
9
|
செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய கொழுமலரா னன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய விழுமியசீர் வெங்குருவொ டோங்குதராய் வேணுபுர மிகுநன் மாடக் கழுமலமென் றின்னபெயர்பன்னிரண்டுங் [கண்ணுதலான் கருது மூரே.
|
10
|
| Go to top |
கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குருப் புறவங் காழி நிச்சல் விழவோவா நீடார் சிரபுரநீள் சண்பை மூதூர் நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல் அச்சங்கள் தீர்த்தருளு மம்மான் கழுமலநாம் அமரு மூரே.
|
11
|
காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் பாவியசீர்ப் பன்னிரண்டு நன்னூலாப் பத்திமையாற் பனுவன் மாலை நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன மேவியிசை மொழிவார் விண்ணவரி லெண்ணுதலை விருப்பு ளாரே.
|
12
|
Other song(s) from this location: திருஆலவாய் (மதுரை)
1.094
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
Tune - குறிஞ்சி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.066
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநீற்று பதிகம், மந்திரம் ஆவது நீறு; வானவர்
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.070
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வன்னியும் மத்தமும் மதி பொதி
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) )
|
3.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மானின் நேர் விழி மாதராய்!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காட்டு மா அது உரித்து,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.051
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வீடு அலால் அவாய் இலாஅய்,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.054
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) )
|
3.087
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தளிர் இள வளர் ஒளி
Tune - சாதாரி
(திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
|
3.108
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேத வேள்வியை நிந்தனை செய்து
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.115
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், ஆல நீழல் உகந்தது இருக்கையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
Tune - புறநீர்மை
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
4.062
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
6.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
Tune - திருத்தாண்டகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|