வானமர் திங்களு நீரு மருவிய வார்சடை யானைத் தேனமர் கொன்றையி னானைத் தேவர் தொழப்படு வானைக் கானம ரும்பிணை புல்கிக் கலைபயி லுங்கடம் பூரில் தானமர் கொள்கையி னானைத் தாள்தொழ வீடெளி தாமே.
|
1
|
அரவினொ டாமையும் பூண்டு வந்துகில் வேங்கை யதளும் விரவுந் திருமுடி தன்மேல் வெண்டிங்கள் சூடி விரும்பிப் பரவுந் தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம் இரவும் பகலும் பணிய வின்ப நமக்கது வாமே.
|
2
|
இளிபடு மின்சொலி னார்க ளிருங்குழன் மேலிசைந் தேறத் தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழி லார்கடம் பூரில் ஒளிதரு வெண்பிறை சூடி யொண்ணுத லோடுட னாகிப் புலியத ளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுது நாமே.
|
3
|
பறையொடு சங்க மியம்பப் பல்கொடி சேர்நெடு மாடம் கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர்கடம் பூரில் மறையொலி கூடிய பாடன் மருவிநின் றாடன் மகிழும் பிறையுடை வார்சடை யானைப் பேணவல் லார்பெரி யோரே.
|
4
|
தீவிரி யக்கழ லார்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில் நாவிரி கூந்தனற் பேய்கள் நகைசெய்ய நட்ட நவின்றோன் காவிரி கொன்றை கலந்த கண்ணுத லான்கடம் பூரில் பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே.
|
5
|
| Go to top |
தண்புன னீள்வய றோறுந் தாமரை மேலனம் வைகக் கண்புணர் காவில்வண் டேறக் கள்ளவி ழுங்கடம் பூரில் பெண்புனை கூறுடை யானைப் பின்னு சடைப்பெரு மானைப் பண்புனை பாடல் பயில்வார் பாவமி லாதவர் தாமே.
|
6
|
பலிகெழு செம்மலர் சாரப் பாடலொ டாட லறாத கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ்கடம் பூரில் ஒலிதிகழ் கங்கை கரந்தா னொண்ணுத லாளுமை கேள்வன் புலியத ளாடையி னான்றன் புனைகழல் போற்றல் பொருளே.
|
7
|
பூம்படு கிற்கயல் பாயப் புள்ளிரி யப்புறங் காட்டில் காம்படு தோளியர் நாளுங் கண்கவ ருங்கடம் பூரில் மேம்படு தேவியொர் பாக மேவியெம் மானென வாழ்த்தித் தேம்படு மாமலர் தூவித் திசைதொழத் தீய கெடுமே.
|
8
|
திருமரு மார்பி லவனுந் திகழ்தரு மாமல ரோனும் இருவரு மாயறி வொண்ணா வெரியுரு வாகிய வீசன் கருவரை காலி லடர்த்த கண்ணுத லான்கடம் பூரில் மருவிய பாடல் பயில்வார் வானுல கம்பெறு வாரே.
|
9
|
ஆடை தவிர்த்தறங் காட்டு மவர்களு மந்துவ ராடைச் சோடைக ணன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர் வேடம் பலபல காட்டும் விகிர்தனம் வேத முதல்வன் காட தனினட மாடுங் கண்ணுத லான்கடம் பூரே.
|
10
|
| Go to top |
விடைநவி லுங்கொடி யானை வெண்கொடி சேர்நெடு மாடம் கடைநவி லுங்கடம் பூரிற் காதல னைக்கடற் காழி நடைநவின் ஞானசம் பந்தன் நன்மையா லேத்திய பத்தும் படைநவில் பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே.
|
11
|