கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும் மறையு நவின்றிலர் போலு மாசுண மார்த்திலர் போலும் பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.
|
1
|
கூரம் பதுவிலர் போலுங் கொக்கி னிறகிலர் போலும் ஆரமும் பூண்டிலர் போலு மாமை யணிந்திலர் போலுந் தாருஞ் சடைக்கிலர் போலுஞ் சண்டிக் கருளிலர் போலும் பேரும் பலவிலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.
|
2
|
சித்த வடிவிலர் போலுந் தேசந் திரிந்திலர் போலுங் கத்தி வருங்கடுங் காளி கதங்கள் தவிர்த்திலர் போலும் மெய்த்த நயன மிடந்தார்க் காழி யளித்திலர் போலும் பித்த வடிவிலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.
|
3
|
நச்சர வாட்டிலர் போலு நஞ்ச மிடற்றிலர் போலுங் கச்சுத் தரித்திலர் போலுங் கங்கை தரித்திலர் போலு மொய்ச்சவன் பேயிலர் போலு முப்புர மெய்திலர் போலும் பிச்சை யிரந்திலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.
|
4
|
தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் பிடித்திலர் போலும் ஆடு தடக்கை வலிய யானை யுரித்திலர் போலும் ஓடு கரத்திலர் போலு மொள்ளழல் கையிலர் போலும் பீடு மிகுத்தெழு செல்வப் பிரம புரமமர்ந் தாரே.
|
5
|
Go to top |
விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர் போலும் அண்ண லயன்றலை வீழ வன்று மறுத்திலர் போலும் வண்ண வெலும்பினொ டக்கு வடங்க டரித்திலர் போலும் பெண்ணின மொய்த்தெழு செல்வப் பிரம புரமமர்ந் தாரே.
|
6
|
பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங் கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந் துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும் பின்றியும் பீடும் பெருகும் பிரம புரமமர்ந் தாரே.
|
7
|
பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும் அரச னிலங்கையர் கோனை யன்று மடர்த்திலர் போலும் புரைசெய் புனத்திள மானும் புலியி னதளிலர் போலும் பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரமமர்ந் தாரே.
|
8
|
அடிமுடி மாலயன் றேட வன்று மளப்பிலர் போலுங் கடிமல ரைங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும் படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கட லீந்திலர் போலும் பிடிநடை மாதர் பெருகும் பிரம புரமமர்ந் தாரே.
|
9
|
வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும் அற்றவ ரானிழ னால்வர்க் கறங்க ளுரைத்திலர் போலும் உற்றல ரொன்றிலர் போலு மோடு முடிக்கிலர் போலும் பெற்றமு மூர்ந்திலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.
|
10
|
Go to top |
பெண்ணுரு வாணுரு வல்லாப் பிரம புரநகர் மேய அண்ணல்செய் யாதன வெல்லா மறிந்து வகைவகை யாலே நண்ணிய ஞானசம் பந்த னவின்றன பத்தும்வல் லார்கள் விண்ணவ ரோடினி தாக வீற்றிருப் பாரவர் தாமே.
|
11
|
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
|
1.063
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.127
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.128
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) )
|
2.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|