தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய் ஓவா வுவரிகொள்ள வுயர்ந்தா யென்றேத்தி மூவா முனிவர் வணங்குங் கோயின் முதுகுன்றே.
|
1
|
எந்தை யிவனென் றிரவி முதலா விறைஞ்சுவார் சிந்தை யுள்ளே கோயி லாகத் திகழ்வானை மந்தி யேறி யினமா மலர்கள் பலகொண்டு முந்தித் தொழுது வணங்குங் கோயின் முதுகுன்றே.
|
2
|
நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தரம் தேடு மடியார் சிந்தை யுள்ளே திகழ்வானைப் பாடுங் குயிலி னயலே கிள்ளை பயின்றேத்த மூடுஞ் சோலை முகிறோய் கோயின் முதுகுன்றே.
|
3
|
தெரிந்த வடியார் சிவனே யென்று திசைதோறும் குருந்த மலருங் குரவி னலருங் கொண்டேந்தி இருந்து நின்று மிரவும் பகலு மேத்துஞ்சீர் முரிந்து மேகந் தவழுஞ் சோலை முதுகுன்றே.
|
4
|
வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தம் சித்த நைந்து சிவனே யென்பார் சிந்தையார் கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்து முத்தா றுடைய முதல்வர் கோயின் முதுகுன்றே.
|
5
|
Go to top |
வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி நம்பா வென்ன நல்கும் பெருமா னுறைகோயில் கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும் மொய்ம்பார் சோலை வண்டு பாடு முதுகுன்றே.
|
6
|
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில் பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே.
|
8
|
அல்லி மலர்மே லயனு மரவின் அணையானும் சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச் சோதியூர் கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட முல்லை யயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.
|
9
|
கருகு முடலார் கஞ்சி யுண்டு கடுவேதின் றுருகு சிந்தை யில்லார்க்கயலா னுறைகோயில் திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே.
|
10
|
Go to top |
அறையார் கடல்சூ ழந்தண் காழிச் சம்பந்தன் முறையான் முனிவர் வணங்குங் கோயின் முதுகுன்றைக் குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள் பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே.
|
11
|
Other song(s) from this location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.012
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மத்தா வரை நிறுவி, கடல்
Tune - நட்டபாடை
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.053
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
Tune - பழந்தக்கராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.093
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நின்று மலர் தூவி, இன்று
Tune - குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.131
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
2.064
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
Tune - காந்தாரம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்ண மா மலர் கொடு
Tune - கொல்லி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.099
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முரசு அதிர்ந்து எழுதரு முது
Tune - சாதாரி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
6.068
திருநாவுக்கரசர்
தேவாரம்
கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
Tune - திருத்தாண்டகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.025
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
Tune - நட்டராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.043
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நஞ்சி, இடை இன்று நாளை
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|