குன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி காற்றின் மும்மதில் வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே தென்ற லார்மணி மாட மாளிகை சூளி கைக்கெதிர் நீண்ட பெண்ணைமேல் அன்றில் வந்தணையும் ஆமாத்தூ ரம்மானே.
|
1
|
பரவி வானவர் தான வர்பல ருங்க லங்கிட வந்த கார்விடம் வெருவ வுண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே கரவின் மாமணி பொன்கொ ழித்திழி சந்து காரகி றந்து பம்பைநீர் அருவி வந்தலைக்கும் ஆமாத்தூ ரம்மானே.
|
2
|
நீண்ட வார்சடை தாழ நேரிழை பாட நீறுமெய் பூசி மாலயன் மாண்ட வார்சுடலை நடமாடு மாண்பதுவென் பூண்ட கேழன் மருப்ப ராவிரி கொன்றை வாள்வரி யாமை பூணென ஆண்ட நாயகனே ஆமாத்தூ ரம்மானே.
|
3
|
சேலின் நேரன கண்ணி வெண்ணகை மான்வி ழித்திரு மாதைப் பாகம்வைத் தேல மாதவ நீமுயல்கின்ற வேடமிதென் பாலி னேர் மொழி மங்கை மார்நட மாடி யின்னிசை பாட நீள்பதி ஆலை சூழ்கழனி ஆமாத்தூ ரம்மானே.
|
4
|
தொண்டர் வந்து வணங்கி மாமலர் தூவி நின்கழ லேத்து வாரவர் உண்டியால் வருந்த விரங்காத தென்னைகொலாம் வண்ட லார்கழ னிக்க லந்தும லர்ந்த தாமரை மாதர் வாண்முகம் அண்டவாணர் தொழும் ஆமாத்தூ ரம்மானே.
|
5
|
Go to top |
ஓதி யாரண மாயநுண் பொருள் அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி நீதி யாலநீழல் உரைக்கின்ற நீர்மையதென் சோதி யேசுட ரேசு ரும்பமர் கொன்றை யாய்திரு நின்றி யூருறை ஆதியே யரனே ஆமாத்தூ ரம்மானே.
|
6
|
மங்கை வாணுதன் மான்ம னத்திடை வாடி யூடம ணங்க மழ்சடைக் கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம் பங்க யமது வுண்டு வண்டிசை பாட மாமயி லாட விண்முழ வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூ ரம்மானே.
|
7
|
நின்ற டர்த்திடு மைம்பு லன்னிலை யாத வண்ண நினைந்து ளத்திடை வென்றடர்த் தொருபான் மடமாதை விரும்புதலென் குன்றெ டுத்தநி சாச ரன்திரள் தோளி ருபது தானெ ரிதர அன்றடர்த் துகந்தார் ஆமாத்தூ ரம்மானே.
|
8
|
செய்ய தாமரை மேலி ருந்தவ னோடு மாலடி தேட நீண்முடி வெய்ய வாரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென் தைய லாளொடு பிச்சைக் கிச்சை தயங்கு தோலரை யார்த்த வேடங்கொண் டைய மேற்றுகந்தார் ஆமாத்தூ ரம்மானே.
|
9
|
புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென் முத்தை வென்ற முறுவ லாளுமை பங்க னென்றிமை யோர்ப ரவிடும் அத்தனே யரியாய் ஆமாத்தூ ரம்மானே.
|
10
|
Go to top |
வாடல் வெண்டலை மாலை யார்த்தும யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம் ஆடன் மேயதென்னென்று ஆமாத்தூ ரம்மானைக் கோட னாக மரும்பு பைம்பொழிற் கொச்சை யாரிறை ஞான சம்பந்தன் பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே.
|
11
|