பண்ணி னேர்மொழி மங்கை மார்பலர் பாடி யாடிய வோசை நாடொறுங் கண்ணி னேரயலே பொலியுங் கடற்காழிப் பெண்ணி னேரொரு பங்கு டைப்பெரு மானை யெம்பெரு மானென் றென்றுன்னும் அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே.
|
1
|
மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல் மோதி மீதெறி சங்க வங்கமுங் கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி வண்ட லம்பிய கொன்றை யானடி வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை விண்ட லங்கெளிதாம் அதுநல் விதியாமே.
|
2
|
நாடெ லாமொளி யெய்த நல்லவர் நன்று மேத்தி வணங்கு வார்பொழிற் காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழித் தோடு லாவிய காது ளாய்சுரி சங்க வெண்குழை யானென் றென்றுன்னும் வேடங் கொண்டவர்கள் வினை நீங்கலுற்றாரே.
|
3
|
மையி னார்பொழில் சூழ நீழலில் வாச மார்மது மல்க நாடொறும் கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி ஐய னேயர னேயென் றாதரித் தோதி நீதியு ளேநி னைப்பவர் உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே.
|
4
|
மலிக டுந்திரை மேனி மிர்ந்தெதிர் வந்து வந்தொளிர் நித்திலம் விழக் கலிக டிந்தகையார் மருவுங் கலிக்காழி வலிய காலனை வீட்டி மாணிதன் இன்னு யிரளித் தானை வாழ்த்திட மெலியுந் தீவினைநோய் அவைமேவுவார் வீடே.
|
5
|
Go to top |
மற்று மிவ்வுல கத்து ளோர்களும் வானு ளோர்களும் வந்து வைகலுங் கற்ற சிந்தையராய்க் கருதுங் கலிக்காழி நெற்றி மேலமர் கண்ணி னானை நினைந்தி ருந்திசை பாடு வார்வினை செற்றமாந் தரெனத் தெளிமின்கள் சிந்தையுளே.
|
6
|
தான லம்புரை வேதிய ரொடு தக்க மாதவர் தாந்தொ ழப்பயில் கானலின் விரைசேர விம்முங் கலிக்காழி ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற வாகி நின்றவொ ருவனே யென்றென் றானலங் கொடுப்பார் அருள்வேந்த ராவாரே.
|
7
|
மைத்த வண்டெழு சோலை யாலைகள் சாலி சேர்வய லார வைகலுங் கத்து வார்கடல் சென் றுலவுங் கலிக்காழி அத்த னேயர னேய ரக்கனை யன்ற டர்த்துகந் தாயு னகழல் பத்தராய்ப் பரவும் பயனீங்கு நல்காயே.
|
8
|
பரும ராமொடு தெங்கு பைங்கத லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள் கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழித் திருவி னாயக னாய மாலொடு செய்ய மாமலர்ச் செல்வ னாகிய இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே.
|
9
|
பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி யாது வண்டுகி லாடை போர்த்தவர் கண்டு சேரகிலார் அழகார் கலிக்காழித் தொண்டை வாயுமை யோடு கூடிய வேட னேசுட லைப்பொ டியணி அண்டவா ணனென்பார்க் கடையா வல்லல்தானே.
|
10
|
Go to top |
பெயரெ னும்மிவை பன்னி ரண்டினு முண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ் கயலுலாம் வயல்சூழ்ந் தழகார் கலிக்காழி நயன டன்கழ லேத்தி வாழ்த்திய ஞான சம்பந்தன் செந்த மிழுரை உயருமா மொழிவார் உலகத் துயர்ந்தாரே.
|
11
|
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|