திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர் உருத்திக ழெழிற்கயிலை வெற்பிலுறை தற்கே விருப்புடைய வற்புதரி ருக்குமிட மேரார் மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே.
|
1
|
கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர் இந்திரனு ணர்ந்துபணி யெந்தையிட மெங்கும் சந்தமலி யுந்தருமி டைந்தபொழில் சார வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே.
|
2
|
கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில் கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக் கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர் வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே.
|
3
|
நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன் றெண்ணிலி மறைப்பொருள்வி ரித்தவ ரிடஞ்சீர்த் தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே.
|
4
|
வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக் கன்றிவரு கோபமிகு காளிகத மோவ நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால் மன்றன்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே.
|
5
|
Go to top |
பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப் பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக் கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே.
|
6
|
துன்னுகுழன் மங்கையுமை நங்கைசுளி வெய்தப் பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே என்னசதி யென்றுரைசெ யங்கணனி டஞ்சீர் மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே.
|
7
|
இரக்கமில்கு ணத்தொடுல கெங்குநலி வெம்போர் அரக்கன்முடி யத்தலை புயத்தொடும டங்கத் துரக்கவிர லிற்சிறிது வைத்தவரி டஞ்சீர் வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே.
|
8
|
பருத்துருவ தாகிவிண் அடைந்தவனொர் பன்றிப் பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றும் கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவனி டங்கார் வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே.
|
9
|
பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர் சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம் நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால் மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே.
|
10
|
Go to top |
வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள் ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப் பூசுரன் உரைத்ததமிழ் பத்துமிவை வல்லார் நேசமலி பத்தரவர் நின்மலன் அடிக்கே.
|
11
|
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|