![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=DFxah8nE4aY Add audio link
2.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநாகேச்சுரம் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு குன்றமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு செண்பகாரணியேசுவரர் திருவடிகள் போற்றி
பொன்நேர் தருமே னியனே புரியும்
மின்நேர் சடையாய் விரைகா விரியின்
நன்னீர் வயல்நா கேச்சுர நகரின்
மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே.
1
சிறவார் புரமூன் றெரியச் சிலையில்
உறவார் கணையுய்த் தவனே உயரும்
நறவார் பொழில்நா கேச்சுர நகருள்
அறவா எனவல் வினையா சறுமே.
2
கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழித் தவனே
நல்லார் தொழுநா கேச்சுர நகரில்
செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே.
3
நகுவான் மதியோ டரவும் புனலும்
தகுவார் சடையின் முடியாய் தளவம்
நகுவார் பொழில்நா கேச்சுர நகருள்
பகவா எனவல் வினைபற் றறுமே.
4
கலைமான் மறியுங் கனலும் மழுவும்
நிலையா கியகை யினனே நிகழும்
நலமா கியநா கேச்சுர நகருள்
தலைவா எனவல் வினை தா னறுமே.
5
Go to top
குரையார் கழலா டநடங் குலவி
வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே
நரையார் விடையே றுநாகேச் சுரத்தெம்
அரைசே யெனநீங் குமருந் துயரே.
6
முடையார் தருவெண் டலைகொண் டுலகில்
கடையார் பலி கொண் டுழல்கா ரணனே
நடையார் தருநா கேச்சுர நகருள்
சடையாவென வல்வினை தானறுமே.
7
ஓயா தவரக் கனொடிந் தலற
நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே
வாயா ரவழுத் துவர்நா கேச்சுரத்
தாயே யெனவல் வினைதா னறுமே.
8
நெடியா னொடுநான் முகன்நே டலுறச்
சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே
நடுமா வயல்நா கேச்சுர நகரே
இடமா வுறைவா யெனஇன் புறுமே.
9
மலம்பா வியகை யொடுமண் டையதுண்
கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில்
நலம்பா வியநா கேச்சுர நகருள்
சிலம்பா வெனத்தீ வினைதேய்ந் தறுமே.
10
Go to top
கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன்
தலமார் தருசெந் தமிழின் விரகன்
நலமார் தருநா கேச்சுரத் தரனைச்
சொலமா லைகள்சொல் லநிலா வினையே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநாகேச்சுரம்
2.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின்
Tune - இந்தளம்
(திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
2.119
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தழை கொள் சந்தும்(ம்), அகிலும்,
Tune - செவ்வழி
(திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000