கோடல்கோங் கங்குளிர் கூவிள மாலை குலாயசீர் ஓடுகங் கையொளி வெண்பிறை சூடு மொருவனார் பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே ஆடு மாறுவல் லானுமை யாறுடை யையனே.
|
1
|
தன்மை யாருமறி வாரிலை தாம்பிற ரெள்கவே பின்னு முன்னுஞ்சில பேய்க்கணஞ் சூழத் திரிதர்வர் துன்ன வாடை யுடுப்பர் சுடலைப்பொடி பூசுவர் அன்னமா லுந்துறை யானுமை யாறுடை யையனே.
|
2
|
கூறு பெண்ணுடை கோவண முண்பது வெண்டலை மாறி லாருங்கொள் வாரிலை மார்பில் அணிகலம் ஏறு மேறித் திரி வ ரிமை யோர்தொழு தேத்தவே ஆறு நான்குஞ்சொன் னானுமை யாறுடை யையனே.
|
3
|
பண்ணி னல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார் எண்ணி னல்லகுணத் தாரிணை வேல்வென்ற கண்ணினார் வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே அண்ணல் கேட்டுகந் தானுமை யாறுடை யையனே.
|
4
|
வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே வானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார் தேனெய் பாறயிர் தெங்கிள நீர்கரும் பின்றெளி ஆனஞ் சாடுமுடி யானுமை யாறுடை யையனே.
|
5
|
Go to top |
எங்கு மாகிநின் றானு மியல்பறி யப்படா மங்கை பாகங்கொண் டானு மதிசூடு மைந்தனும் பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய் அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை யையனே.
|
6
|
ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாம் சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான் வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய் ஆதி யாகிநின் றானுமை யாறுடை யையனே.
|
7
|
குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய் விரவு நீறணி வார்சில தொண்டர் வியப்பவே பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால் அரவ மார்த்துகந் தானுமை யாறுடை யையனே.
|
8
|
உரைசெய் தொல்வழி செய்தறி யாவிலங் கைக்குமன் வரைசெய் தோளடர்த் துமதி சூடிய மைந்தனார் கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான் அரைசெய் மேகலை யானுமை யாறுடை யையனே.
|
9
|
மாலுஞ் சோதி மலரானு மறிகிலா வாய்மையான் காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல் கோல மாய்க்கொழுந் தீன்று பவளந் திரண்டதோர் ஆல நீழலு ளானுமை யாறுடை யையனே.
|
10
|
Go to top |
கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையான் மெய்யைப் போர்த்துழல் வாரு முரைப்பன மெய்யல மைகொள் கண்டத்தெண்டோண்முக்க ணான்கழல் வாழ்த்தவே ஐயந் தேர்ந்தளிப் பானுமை யாறுடை யையனே.
|
11
|
பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயவை யாற்றினைக் கலிக டிந்தகை யான்கடற் காழியர் காவலன் ஒலிகொள் சம்பந்த னொண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய் மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே.
|
12
|
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|