செத்தில்என் சீவில்என் செஞ்சாந் தணியில்என் மத்தகத் தேஉளி நாட்டி மறிக்கில் என் வித்தக நந்தி விதிவழி யல்லது தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.
|
1
|
தான்முன்னம் செய்த விதிவழி தான் அல்லால் வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று நான்முன்னம் செய்ததே நன்னிலம் ஆயதே.
|
2
|
ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே கூறிட்டுக் கொண்டு சுமந்தழி வாரில்லை நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியை பேறிட்டென் உள்ளம் பிரயகி லாதே.
|
3
|
வானின் றிடிக்கில்என் மாகடல் பொங்கில்என் கானின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என் தானொன்றி மாருதம் சண்டம் அடிக்கில்என் நானொன்றி நாதனை நாடுவன் நானே.
|
4
|
ஆனை துரத்தில்என் அம்பூ டறுக்கில்என் கானத் துழுவை கலந்து வளைக்கில்என் ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த ஞானத் துழவினை நான்உழு வேனே.
|
5
|
| Go to top |
கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன் நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை வீடு கெடின்மற்றோர் வீடுபுக் காலொக்கும் பாடது நந்தி பரிசறி வார்கட்கே.
21, |
6
|