முத்திக்கு வித்து முதல்வன்றன் ஞானமே பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல் சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.
|
1
|
காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி காரிய காரண வாதனைப் பற்றறப் பாரண வும்உப சாந்தப் பரிசிதே.
|
2
|
அன்ன துரியமே ஆத்தும சுத்தியும் முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி மன்னு பரம்காட்சி யாவ(து) உடன்உற்றுத் தன்னின் வியாத்தி தனி உப சாந்தமே.
|
3
|
ஆறா றமைந்தா றவத்தையுள் நீங்குதல் பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி கூறாத சாக்கிரா தீதம் குருபரன் பேறாம் வியாத்தம் பிறங்குப சாந்தமே.
|
4
|
வாய்ந்த உபசாந்தம் வாதனை உள்ளம் போய் ஏய்ந்த சிவம்ஆதல் இன்சிவா னந்தத்துத் தோய்ந்து அறல் மோனச் சுகானு பவத்தொடே ஆய்ந்து அதில் தீர்கை ஆனதீ ரைந்துமே.
|
5
|
| Go to top |
பரையின் பரஅப ரத்துடன் ஏகமாய்த் திரையின்இன் றாகிய தெண்புனல் போலவுற்(று) உரையுணர்ந்(து) ஆரமு தொக்க உணர்ந்துளோன் கரைகண் டவன் உரை யற்ற கணக்கிலே.
30, |
6
|