சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.123   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவலிவலம் - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் ராகத்தில் திருமுறை அருள்தரு வாளையங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு மனத்துணைநாதர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=5thCIuYVLWc   Add audio link Add Audio

பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை யெதிர்விழி உமையவள்
மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே.

1

இட்டம தமர்பொடி யிசைதலி னசைபெறு
பட்டவிர் பவளநன் மணியென வணிபெறு
விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்
மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே.

2

உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி
கருமணி நிகர்கள முடையவன் மிடைதரு
மருவலி பொழில்வலி வலமுறை யிறையே.

3

அனனிகர் சடையழ லவியுற வெனவரு
புனனிகழ் வதுமதி நனைபொறி யரவமும்
எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை
மனமுடை யவர்வலி வலமுறை யிறையே.

4

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

5
Go to top

தரைமுத லுலகினி லுயிர்புணர் தகைமிக
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து
நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்
வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே.

6

நலிதரு தரைவர நடைவரு மிடையவர்
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
பலிகொள வருபவ னெழின்மிகு தொழில்வளர்
வலிவரு மதில்வலி வலமுறை யிறையே.

7

இரவண னிருபது கரமெழின் மலைதனின்
இரவண நினைதர வவன்முடி பொடிசெய்து
இரவண மமர்பெய ரருளின னகநெதி
இரவண நிகர்வலி வலமுறை யிறையே.

8

தேனமர் தருமல ரணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நில மகழரி யடிமுடி
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை யிறையே.

9

இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையி லுணலுடை யவர்களு நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே.

10
Go to top

மன்னிய வலிவல நகருறை யிறைவனை
இன்னியல் கழுமல நகரிறை யெழின்மறை
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
உன்னிய வொருபது முயர்பொருள் தருமே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவலிவலம்
1.050   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஒல்லைஆறி உள்ளமொன்றிக்
Tune - பழந்தக்கராகம்   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
1.123   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூ இயல் புரிகுழல்; வரிசிலை
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
6.048   திருநாவுக்கரசர்   தேவாரம்   நல்லான் காண், நால்மறைகள் ஆயினான்
Tune - திருத்தாண்டகம்   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
7.067   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய்,
Tune - தக்கேசி   (திருவலிவலம் மனத்துணைநாதர் மாழையங்கண்ணியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000