காட தணிகலங் காரர வம்பதி காலதனில் தோட தணிகுவர் சுந்தரக் காதினிற் றூச்சிலம்பர் வேட தணிவர் விசயற் குருவம் வில்லுங்கொடுப்பர் பீட தணிமணி மாடப் பிரம புரத்தரரே.
|
1
|
கற்றைச் சடையது கங்கண முன்கையிற் றிங்கள்கங்கை பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை சுட்டதுபண் டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும் வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே.
|
2
|
கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது தூவிளங் கும்பொடிப் பூண்டது பூசிற்றுத் துத்திநாகம் ஏவிளங் குந்நுத லாளையும் பாக முரித்தனரின் பூவிளஞ் சோலைப் புகலியுண் மேவிய புண்ணியரே.
|
3
|
உரித்தது பாம்பை யுடன்மிசை யிட்டதோ ரொண்களிற்றை எரித்ததொ ராமையை யின்புறப் பூண்டது முப்புரத்தைச் செருத்தது சூலத்தை யேந்திற்றுத் தக்கனை வேள்விபன்னூல் விரித்தவர் வாழ்தரு வெங்குரு வில்வீற் றிருந்தவரே.
|
4
|
கொட்டுவ ரக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின் மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமு மேந்துவர்வான் தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே.
|
5
|
Go to top |
சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர் கோவணந்தங் கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர் கொக்கிறகும் பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார் பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.
|
6
|
காலது கங்கை கற்றைச் சடையுள்ளாற் கழல்சிலம்பு மாலது வேந்தன் மழுவது பாகம் வளர்கொழுங்கோட் டாலது வூர்வ ரடலேற் றிருப்ப ரணிமணிநீர்ச் சேலது கண்ணியொர் பங்கர் சிரபுர மேயவரே.
|
7
|
நெருப்புரு வெள்விடை மேனிய ரேறுவர் நெற்றியின்கண் மருப்புறு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன் விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறன் மாதவர்வாழ் பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே.
|
8
|
இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த திரலையின்னாள் கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது கலங்கிளர் மொந்தையி னாடுவர் கொட்டுவர் காட்டகத்துச் சலங்கிளர் வாழ்வயற் சண்பையுண் மேவிய தத்துவரே.
|
9
|
அடியிணை கண்டிலன் றாமரை யோன்மான் முடிகண்டிலன் கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர் தோலுடுப்பர் பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர் கடியணி யும்பொழிற் காழியுண் மேய கறைக்கண்டரே.
|
10
|
Go to top |
கையது வெண்குழை காதது சூல மமணர் புத்தர் எய்துவர் தம்மை யடியவ ரெய்தாரொ ரேனக்கொம்பு மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய கொய்தலர் பூம்பொழிற் கொச்சையுண் மேவிய கொற்றவரே.
|
11
|
கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய கடவுடன்னை நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச் சொல்லிடல் கேட்டல்வல் லோர்தொல்லை வானவர் தங்களொடும் செல்குவர் சீரரு ளாற்பெற லாஞ்சிவ லோகமதே.
|
12
|
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
|
1.063
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.127
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.128
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) )
|
2.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|