![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=sZs5as1K7o4 Add audio link
1.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருவல்லம் - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் ராகத்தில் திருமுறை அருள்தரு வல்லாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வல்லநாதர் திருவடிகள் போற்றி
எரித்தவன் முப்புர மெரியின்மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவ னுறைவிடந் திருவல்லமே.
1
தாயவ னுலகுக்குத் தன்னொப்பிலாத்
தூயவன் றூமதி சூடியெல்லாம்
ஆயவ னமரர்க்கு முனிவர்கட்கும்
சேயவ னுறைவிடந் திருவல்லமே.
2
பார்த்தவன் காமனைப் பண்பழியப்
போர்த்தவன் போதகத் தின்னுரிவை
ஆர்த்தவன் நான்முகன் றலையையன்று
சேர்த்தவ னுறைவிடந் திருவல்லமே.
3
கொய்தவம் மலரடி கூடுவார்தம்
மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்
பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்
செய்தவ னுறைவிடந் திருவல்லமே.
4
சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம்
நேர்ந்தவ னேரிழை யோடுங்கூடித்
தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே
சேர்ந்தவ னுறைவிடந் திருவல்லமே.
5
Go to top
பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்
உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று
விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று
சிதைத்தவ னுறைவிடந் திருவல்லமே.
6
இப்பாடல் கிடைக்கவில்லை.
7
இகழ்ந்தரு வரையினை யெடுக்கலுற்றாங்
ககழ்ந்தவல் லரக்கனை யடர்த்தபாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவ னுறைவிடந் திருவல்லமே.
8
பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவ னருமறை யங்கமானான்
கரியவ னான்முகன் காணவொண்ணாத்
தெரியவன் வளநகர் திருவல்லமே.
9
அன்றிய வமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய வறவுரை கூறாவண்ணம்
வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்கும்
சென்றவ னுறைவிடந் திருவல்லமே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவல்லம்
1.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன்,
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவல்லம் வல்லநாதர் வல்லாம்பிகையம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000