![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=u-A7eRn23xU Add audio link
1.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருஅன்னியூர் (பொன்னூர்) - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி
மன்னி யூரிறை சென்னி யார்பிறை
அன்னி யூரமர் மன்னு சோதியே.
1
பழகுந் தொண்டர்வம் அழக னன்னியூர்க்
குழகன் சேவடி தொழுது வாழ்மினே.
2
நீதி பேணுவீர் ஆதி யன்னியூர்ச்
சோதி நாமமே ஓதி யுய்ம்மினே.
3
பத்த ராயினீர் அத்த ரன்னியூர்ச்
சித்தர் தாள் தொழ முத்த ராவரே.
4
நிறைவு வேண்டுவீர் அறவ னன்னியூர்
மறையு ளான்கழற் குறவு செய்ம்மினே.
5
Go to top
இன்பம் வேண்டுவீர் அன்ப னன்னியூர்
நன்பொ னென்னுமின் உம்பராகவே.
6
அந்த ணாளர்தம் தந்தை யன்னியூர்
எந்தை யேயெனப் பந்த நீங்குமே.
7
தூர்த்த னைச்செற்ற தீர்த்த னன்னியூர்
ஆத்த மாவடைந் தேத்தி வாழ்மினே.
8
இருவர் நாடிய அரவ னன்னியூர்
பரவு வார்விண்ணுக் கொருவ ராவரே.
9
குண்டர் தேரருக்கு அண்ட னன்னியூர்த்
தொண்டு ளார்வினை விண்டு போகுமே.
10
Go to top
பூந்த ராய்ப்பந்தன் ஆய்ந்த பாடலால்
வேந்த னன்னியூர் சேர்ந்து வாழ்மினே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருஅன்னியூர் (பொன்னூர்)
1.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மன்னி ஊர் இறை; சென்னியார்,
Tune - குறிஞ்சி
(திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
5.008
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாறு அலைத்த படுவெண் தலையினன்;
Tune - திருக்குறுந்தொகை
(திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000