அயிலுறுபடையினர் விடையினர்முடிமே லரவமுமதியமும் விரவியவழகர் மயிலுறுசாயல வனமுலையொருபான் மகிழ்பவர்வானிடை முகில்புல்குமிடறர் பயில்வுறுசரிதைய ரெருதுகந்தேறிப் பாடியுமாடியும் பலிகொள்வர்வலிசேர் கயிலையும்பொதியிலு மிடமெனவுடையார் கழுமலநினையநம் வினைகரிசறுமே.
|
1
|
கொண்டலுநீலமும் புரைதிருமிடறர் கொடுமுடியுறைபவர் படுதலைக்கையர் பண்டலரயன்சிர மரிந்தவர்பொருந்தும் படர்சடையடிகளார் பதியதனயலே வண்டலும்வங்கமுஞ் சங்கமுஞ்சுறவு மறிகடற்றிரைகொணர்ந் தெற்றியகரைமேற் கண்டலுங்கைதையு நெய்தலுங்குலவுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.
|
2
|
எண்ணிடையொன்றின ரிரண்டினருருவ மெரியிடைமூன்றினர் நான்மறையாளர் மண்ணிடையைந்தின ராறினரங்கம் வகுத்தனரேழிசை யெட்டிருங்கலைசேர் பண்ணிடையொன்பது முணர்ந்தவர்பத்தர் பாடிநின்றடிதொழ மதனனைவெகுண்ட கண்ணிடைக்கனலினர் கருதியகோயில் கழுமலநினையநம் வினைகரிசறுமே.
|
3
|
எரியொருகரத்தின ரிமையவர்க்கிறைவ ரேறுகந்தேறுவர் நீறுமெய்பூசித் திரிதருமியல்பின ரயலவர்புரங்க டீயெழவிழித்தனர் வேய்புரைதோளி வரிதருகண்ணிணை மடவரலஞ்ச மஞ்சுறநிமிர்ந்ததோர் வடிவொடும்வந்த கரியுரிமருவிய வடிகளுக்கிடமாங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.
|
4
|
ஊரெதிர்ந்திடுபலி தலைகலனாக வுண்பவர்விண்பொலிந் திலங்கியவுருவர் பாரெதிர்ந்தடிதொழ விரைதருமார்பிற் படவரவாமையக் கணிந்தவர்க்கிடமாம் நீரெதிர்ந்திழிமணி நித்திலமுத்த நிரைசுரிசங்கமொ டொண்மணிவரன்றிக் காரெதிர்ந்தோதம்வன் றிரைகரைக்கெற்றுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.
|
5
|
Go to top |
முன்னுயிர்த்தோற்றமு மிறுதியுமாகி முடியுடையமரர்க ளடிபணிந்தேத்தப் பின்னியசடைமிசைப் பிறைநிறைவித்த பேரருளாளனார் பேணியகோயில் பொன்னியனறுமலர் புனலொடுதூபஞ் சாந்தமுமேந்திய கையினராகிக் கன்னியர் நாடொறும் வேடமேபரவுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.
|
6
|
கொலைக்கணித்தாவரு கூற்றுதைசெய்தார் குரைகழல்பணிந்தவர்க் கருளியபொருளின் நிலைக்கணித்தாவர நினையவல்லார்தந் நெடுந்துயர்தவிர்த்தவெந் நிமலருக்கிடமாம் மலைக்கணித்தாவர வன்றிரைமுரல மதுவிரிபுன்னைகண் முத்தெனவரும்பக் கலைக்கணங்கானலி னீழலில்வாழுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.
|
7
|
புயம்பலவுடையதென் னிலங்கையர்வேந்தன் பொருவரையெடுத்தவன் பொன்முடிதிண்டோள் பயம்பலபடவடர்த் தருளியபெருமான் பரிவொடுமினிதுறை கோயிலதாகும் வியன்பலவிண்ணினு மண்ணினுமெங்கும் வேறுவேறுகங்களிற் பெயருளதென்னக் கயம்பலபடக்கடற் றிரைகரைக்கெற்றுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.
|
8
|
விலங்கலொன்றேந்திவன் மழைதடுத்தோனும் வெறிகமழ்தாமரை யோனுமென்றிவர்தம் பலங்களானேடியு மறிவரிதாய பரிசினன்மருவிநின் றினிதுறைகோயில் மலங்கிவன்றிரைவரை யெனப்பரந்தெங்கு மறிகடலோங்கிவெள் ளிப்பியுஞ்சுமந்து கலங்கடன்சரக்கொடு நிரக்கவந்தேறுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.
|
9
|
ஆம்பலதவமுயன் றறவுரைசொல்லு மறிவிலாச்சமணருந் தேரருங்கணிசேர் நோம்பலதவமறி யாதவர்நொடிந்த மூதுரைகொள்கிலா முதல்வர்தம்மேனிச் சாம்பலும்பூசிவெண் டலைகலனாகத் தையலாரிடுபலி வையகத்தேற்றுக் காம்பனதோளியொ டினிதுறைகோயில் கழுமலநினையநம் வினைகரிசறுமே.
|
10
|
Go to top |
கலிகெழுபாரிடை யூரெனவுளதாங் கழுமலம்விரும்பிய கோயில்கொண்டவர்மேல் வலிகெழுமனமிக வைத்தவன்மறைசேர் வருங்கலைஞானசம் பந்தனதமிழின் ஒலிகெழுமாலையென் றுரைசெய்தபத்து முண்மையினானினைந் தேத்தவல்லார்மேல் மெலிகெழுதுயரடை யாவினைசிந்தும் விண்ணவராற்றலின் மிகப்பெறுவாரே.
|
11
|
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|