வரிவளரவிரொளி யரவரைதாழ வார்சடைமுடிமிசை வளர்மதிசூடிக் கரிவளர்தருகழல் கால்வலனேந்திக் கனலெரியாடுவர் காடரங்காக விரிவளர்தருபொழி லிளமயிலால வெண்ணிறத்தருவிக டிண்ணெனவீழும் எரிவளரினமணி புனமணிசார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
|
1
|
ஆற்றையுமேற்றதோ ரவிர்சடையுடைய ரழகினையருளுவர் குழகலதறியார் கூற்றுயிர்செகுப்பதோர் கொடுமையையுடையர் நடுவிருளாடுவர் கொன்றையந்தாரார் சேற்றயன்மிளிர்வன கயலிளவாளை செருச்செயவோர்ப்பன செம்முகமந்தி ஏற்றையொடுழிதரு மெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
|
2
|
கானமுஞ்சுடலையுங் கற்படுநிலனுங் காதலர்தீதிலர் கனன்மழுவாளர் வானமுநிலமையு மிருமையுமானர் வணங்கவுமிணங்கவும் வாழ்த்தவும்படுவார் நானமும்புகையொளி விரையொடுகமழ நளிர்பொழிலிளமஞ்ஞை மன்னியபாங்கர் ஏனமும்பிணையலு மெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
|
3
|
கடமணிமார்பினர் கடறனிலுறைவார் காதலர்தீதிலர் கனன்மழுவாளர் விடமணிமிடறினர் மிளிர்வதோரரவர் வேறுமோர்சரிதையர் வேடமுமுடையர் வடமுலையயலன கருங்குருந்தேறி வாழையின்றீங்கனி வார்ந்துதேனட்டும் இடமுலையரிவைய ரெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
|
4
|
கார்கொண்டகடிகமழ் விரிமலர்க்கொன்றைக் கண்ணியர்வளர்மதி கதிர்விடக்கங்கை நீர்கொண்டசடையினர் விடையுயர்கொடியர் நிழறிகழ்மழுவின ரழறிகழ்நிறத்தர் சீர்கொண்டமென்சிறை வண்டுபண்செய்யும் செழும்புனலனையன செங்குலை வாழை ஏர்கொண்டபலவினொ டெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
|
5
|
Go to top |
தோடணிகுழையினர் சுண்ணவெண்ணீற்றர் சுடலையினாடுவர் தோலுடையாகப் பீடுயர்செய்ததோர் பெருமையையுடையர் பேயுடனாடுவர் பெரியவர்பெருமான் கோடல்களொழுகுவ முழுகுவதும்பி குரவமுமரவமு மன்னியபாங்கர் ஏடவிழ்புதுமலர் கடிகமழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
|
6
|
கழன்மல்குகாலினர் வேலினர்நூலர் கவர்தலையரவொடு கண்டியும்பூண்பர் அழன்மல்குமெரியொடு மணிமழுவேந்தி யாடுவர்பாடுவ ராரணங்குடையர் பொழின்மல்குநீடிய மரவமுமரவ மன்னியகவட்டிடைப் புணர்குயிலாலும் எழின்மல்குசோலையில் வண்டிசைபாடு மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
|
7
|
தேங்கமழ்கொன்றையந் திருமலர்புனைவார் திகழ்தருசடைமிசைத் திங்களுஞ்சூடி வீந்தவர்சுடலைவெண் ணீறுமெய்பூசி வேறுமோர்சரிதையர் வேடமுமுடையர் சாந்தமுமகிலொடு முகில்பொதிந்தலம்பித் தவழ்கனமணியொடு மிகுபளிங்கிடறி ஏந்துவெள்ளருவிக ளெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
|
8
|
பலவிலமிடுபலி கையிலொன்றேற்பர் பலபுகழல்லது பழியிலர்தாமும் தலையிலங்கவிரொளி நெடுமுடியரக்கன் றடக்கைகளடர்த்ததோர் தன்மையையுடையர் மலையிலங்கருவிகண் மணமுழவதிர மழைதவழிளமஞ்ஞை மல்கியசாரல் இலையிலவங்கமு மேலமுங்கமழு மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
|
9
|
பெருமைகடருக்கியோர் பேதுறுகின்ற பெருங்கடல்வண்ணனும் பிரமனுமோரா அருமையரடிநிழல் பரவிநின்றேத்து மன்புடையடியவர்க் கணியருமாவர் கருமைகொள்வடிவொடு சுனைவளர்குவளைக் கயலினம்வயலிள வாளைகளிரிய எருமைகள்படிதர விளவனமாலு மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
|
10
|
Go to top |
மடைச்சுரமறிவன வாளையுங்கயலு மருவியவயறனில் வருபுனற்காழிச் சடைச்சுரத்துறைவதோர் பிறையுடையண்ணல் சரிதைகள்பரவிநின் றுருகுசம்பந்தன் புடைச்சுரத்தருவரைப் பூக்கமழ்சாரற் புணர்மடநடையவர் புடையிடையார்ந்த இடைச்சுரமேத்திய விசையொடுபாட லிவைசொலவல்லவர் பிணியிலர்தாமே.
|
11
|