நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்து நயனத்தாற் சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியா விழிசெய்தான் புறவமுறைவண் பதியாமதியார் புரமூன் றெரிசெய்த இறைவன்அறவ னிமையோரேத்த வுமையோ டிருந்தானே.
|
1
|
உரவன்புலியி னுரிதோலாடை யுடைமேற் படநாகம் விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்த னுகிர்தன்னாற் பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம் பதியாக இரவும்பகலு மிமையோரேத்த வுமையோ டிருந்தானே.
|
2
|
பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ் சிலம்பார்க்கக் கந்தமல்கு குழலிகாணக் கரிகாட் டெரியாடி அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியா வமர்வெய்தி எந்தம்பெருமா னிமையோரேத்த வுமையோ டிருந்தானே.
|
3
|
நினைவார்நினைய வினியான்பனியார் மலர்தூய் நித்தலுங் கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள் கமழ்கொன்றை புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம் பதியாக எனையாளுடையா னிமையோரேத்த வுமையோ டிருந்தானே.
|
4
|
செங்கணரவு நகுவெண்டலையு முகிழ்வெண் டிங்களுந் தங்குசடையன் விடையனுடையன் சரிகோ வணவாடை பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம் பதியாக எங்கும்பரவி யிமையோரேத்த வுமையோ டிருந்தானே.
|
5
|
Go to top |
பின்னுசடைகள் தாழக்கேழ லெயிறு பிறழப்போய் அன்னநடையார் மனைகடோறு மழகார் பலிதேர்ந்து புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம் பதியாக என்னையுடையா னிமையோரேத்த வுமையோ டிருந்தானே.
|
6
|
உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோ ழந்தேவர் விண்ணிற்பொலிய வமுதமளித்த விடைசேர் கொடியண்ணல் பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம் பதியாக எண்ணிற்சிறந்த விமையோரேத்த வுமையோ டிருந்தானே.
|
7
|
விண்டானதிர வியனார்கயிலை வேரோ டெடுத்தான்றன் றிண்டோளுடலு முடியுநெரியச் சிறிதே யூன்றிய புண்டானொழிய வருள்செய்பெருமான் புறவம் பதியாக எண்டோளுடையா னிமையோரேத்த வுமையோ டிருந்தானே.
|
8
|
நெடியானீடா மரைமேலயனும் நேடிக் காண்கில்லாப் படியாமேனி யுடையான்பவள வரைபோற் றிருமார்பிற் பொடியார்கோல முடையான்கடல்சூழ் புறவம் பதியாக இடியார்முழவா ரிமையோரேத்த வுமையோ டிருந்தானே.
|
9
|
ஆலும்மயிலின் பீலியமண ரறிவில் சிறுதேரர் கோலும்மொழிக ளொழியக்குழுவுந் தழலு மெழில்வானும் போலும்வடிவு முடையான்கடல்சூழ் புறவம் பதியாக ஏலும்வகையா லிமையோரேத்த வுமையோ டிருந்தானே.
|
10
|
Go to top |
பொன்னார்மாட நீடுஞ்செல்வப் புறவம் பதியாக மின்னாரிடையா ளுமையாளோடு மிருந்த விமலனைத் தன்னார்வஞ்செய் தமிழின்விரக னுரைத்த தமிழ்மாலை பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோ கந்தானே.
|
11
|