வானார்சோதி மன்னுசென்னி வன்னி புனங்கொன்றைத் தேனார்போது தானார்கங்கை திங்க ளொடுசூடி மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலை யாடுவார் கானூர்மேய கண்ணார்நெற்றி யானூர் செல்வரே.
|
1
|
நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடை தன்மேலோர் ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றை யெழிலாரப் போந்தமென்சொ லின்பம்பயந்த மைந்தரவர் போலாம் காந்தள்விம்மு கானூர்மேய சாந்த நீற்றாரே.
|
2
|
சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்ய மலர்க்கொன்றை மறையார்பாட லாடலோடு மால்விடை மேல்வருவார் இறையார்வந்தெ னில்புகுந்தென் னெழினல முங்கொண்டார் கறையார்சோலைக் கானூர்மேய பிறையார் சடையாரே.
|
3
|
விண்ணார்திங்கட் கண்ணிவெள்ளை மாலை யதுசூடித் தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன் சடைதாழ எண்ணாவந்தெ னில்புகுந்தங் கெவ்வ நோய்செய்தான் கண்ணார்சோலைக் கானூர்மேய விண்ணோர் பெருமானே.
|
4
|
தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண் மதியஞ்சூடி சீர்கொள்பாட லாடலோடு சேட ராய்வந்து ஊர்கள்தோறு மையமேற்றென் னுள்வெந் நோய்செய்தார் கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண் டத்தாரே.
|
5
|
Go to top |
முளிவெள்ளெலும்பு நீறுநூலு மூழ்கு மார்பராய் எளிவந்தார்போ லையமென்றெ னில்லே புகுந்துள்ளத் தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேற லார்பூவில் களிவண்டியாழ்செய் கானூர்மேய வொளிவெண் பிறையாரே.
|
6
|
மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல் செய்திங்கே பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம் பலபேசிப் போவார்போல மால்செய்துள்ளம் புக்க புரிநூலர் தேவார்சோலைக் கானூர்மேய தேவ தேவரே.
|
7
|
தமிழினீர்மை பேசித்தாளம் வீணை பண்ணிநல்ல முழவமொந்தை மல்குபாடல் செய்கை யிடமோவார் குமிழின்மேனி தந்துகோல நீர்மை யதுகொண்டார் கமழுஞ்சோலைக் கானூர்மேய பவள வண்ணரே.
|
8
|
அந்தமாதி யயனுமாலு மார்க்கு மறிவரியான் சிந்தையுள்ளு நாவின்மேலுஞ் சென்னியு மன்னினான் வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலை யாடுவான் கந்தமல்கு கானூர்மேய வெந்தை பெம்மானே.
|
9
|
ஆமையரவோ டேனவெண்கொம் பக்கு மாலைபூண் டாமோர்கள்வர் வெள்ளர்போல வுள்வெந் நோய்செய்தார் ஓமவேத நான்முகனுங் கோணா கணையானும் சேமமாய செல்வர்கானூர் மேய சேடரே.
|
10
|
Go to top |
கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர் மேயானைப் பழுதின்ஞான சம்பந்தன்சொற் பத்தும் பாடியே தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்துநின் றழுதுநக்கு மன்புசெய்வார் அல்ல லறுப்பாரே.
|
11
|