எரியார்மழுவொன் றேந்தியங்கை யிடுதலை யேகலனா வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம் வவ்வுதியே சரியாநாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன் பெரியான்பிரமன் பேணியாண்ட பிரம புரத்தானே.
|
1
|
பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக் கென்றயலே கயலார்தடங்க ணஞ்சொனல்லார் கண்டுயில் வவ்வுதியே இயலானடாவி யின்பமெய்தி யிந்திரனாண் மண்மேல் வியலார்முரச மோங்குசெம்மை வேணு புரத்தானே.
|
2
|
நகலார்தலையும் வெண்பிறையு நளிர்சடை மாட்டயலே பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலை வவ்வுதியே அகலாதுறையு மாநிலத்தில் அயலின்மை யாலமரர் புகலான்மலிந்த பூம்புகலி மேவிய புண்ணியனே.
|
3
|
சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலொர் தாழ்குழையன் அங்கோல்வளையா ரையம்வவ்வா யானலம் வவ்வுதியே செங்கோனடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினை மெய்தெரிய வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குரு மேயவனே.
|
4
|
தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கிய தாழ்சடையன் பிணிநீர்மடவா ரையம்வவ்வாய் பெய்கலை வவ்வுதியே அணிநீருலக மாகியெங்கு மாழ்கட லாலழுங்கத் துணிநீர்பணியத் தான்மிதந்த தோணி புரத்தானே.
|
5
|
Go to top |
கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடை மாட்டயலே அவர்பூம்பலியோ டையம்வவ்வா யானலம் வவ்வுதியே அவர்பூணரையர்க் காதியாய வடன்மன்ன னாண்மண்மேல் தவர்பூம்பதிக ளெங்குமெங்குந் தங்கு தராயவனே.
|
6
|
முலையாழ்கெழுவ மொந்தைகொட்ட முன்கடை மாட்டயலே நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம் வவ்வுதியே தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதொ ராணைநடாய்ச் சிலையான்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுர மேயவனே.
|
7
|
எருதேகொணர்கென் றேறியங்கை யிடுதலை யேகலனாக் கருதேர்மடவா ரையம்வவ்வாய் கண்டுயில் வவ்வுதியே ஒருதேர்கடாவி யாரமரு ளொருபது தேர்தொலையப் பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர் புண்ணியனே.
|
8
|
துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மை யிலாச்சமணுங் கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகை வார்குழலார் அவர்பூம்பலியோ டையம்வவ்வா யானலம் வவ்வுதியே தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பை யமர்ந்தவனே.
|
9
|
நிழலான்மலிந்த கொன்றைசூடி நீறுமெய் பூசிநல்ல குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளை வவ்வுதியே அழலாயுலகங் கவ்வைதீர வைந்தலை நீண்முடிய கழனாகரையன் காவலாகக் காழி யமர்ந்தவனே.
|
10
|
Go to top |
கட்டார்துழாயன் றாமரையா னென்றிவர் காண்பரிய சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலை வவ்வுதியே நட்டார்நடுவே நந்தனாள நல்வினை யாலுயர்ந்த கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சை யமர்ந்தவனே.
|
11
|
கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க் கவுணி நடையார்பனுவன் மாலையாக ஞானசம் பந்தன்நல்ல படையார்மழுவன் மேன்மொழிந்த பல்பெயர்ப் பத்தும்வல்லார்க் கடையாவினைகள் உலகில்நாளும் அமருல காள்பவரே.
|
12
|
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
|
1.063
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.127
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.128
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) )
|
2.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|