அந்தமுமாதியு மாகியவண்ணல் ஆரழலங்கை யமர்ந்திலங்க மந்தமுழவ மியம்ப மலைமகள் காணநின்றாடிச் சந்தமிலங்கு நகுதலைகங்கை தண்மதியம் மயலேததும்ப வெந்தவெண் ணீறுமெய்பூசும் வேட்கள நன்னகராரே.
|
1
|
சடைதனைத்தாழ்தலு மேறமுடித்துச் சங்கவெண்டோடு சரிந்திலங்கப் புடைதனிற் பாரிடஞ்சூழப் போதருமா றிவர்போல்வார் உடைதனினால்விரற் கோவணவாடை யுண்பதுமூரிடு பிச்சைவெள்ளை விடைதனை யூர்திநயந்தார் வேட்கள நன்னகராரே.
|
2
|
பூதமும்பல்கண மும்புடைசூழப் பூமியும்விண்ணு முடன்பொருந்தச் சீதமும்வெம்மையு மாகிச் சீரொடுநின்றவெஞ் செல்வர் ஓதமுங்கானலுஞ் சூழ்தருவேலை யுள்ளங்கலந்திசை யாலெழுந்த வேதமும்வேள்வியு மோவா வேட்கள நன்னகராரே.
|
3
|
அரைபுல்குமைந்தலை யாடலரவ மமையவெண்கோவணத் தோடசைத்து வரைபுல்குமார்பி லொராமை வாங்கியணிந் தவர்தாந் திரைபுல்குதெண்கடல் தண்கழியோதந் தேனலங்கானலில் வண்டுபண்செய்ய விரைபுல்குபைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன்னகராரே.
|
4
|
பண்ணுறுவண்டறை கொன்றையலங்கல் பால்புரைநீறுவெண் ணூல்கிடந்த பெண்ணுறுமார்பினர் பேணார் மும்மதிலெய்த பெருமான் கண்ணுறுநெற்றி கலந்தவெண்டிங்கட் கண்ணியர்விண்ணவர் கைதொழுதேத்தும் வெண்ணிறமால்விடை யண்ணல் வேட்கள நன்னகராரே.
|
5
|
Go to top |
கறிவளர்குன்ற மெடுத்தவன்காதற் கண்கவரைங்கணை யோனுடலம் பொறிவள ராரழலுண்ணப் பொங்கிய பூதபுராணர் மறிவளரங்கையர் மங்கையொர்பங்கர் மைஞ்ஞிறமானுரி தோலுடையாடை வெறிவளர்கொன்றையந் தாரார் வேட்கள நன்னகராரே.
|
6
|
மண்பொடிக்கொண்டெரித் தோர்சுடலை மாமலைவேந்தன் மகள்மகிழ நுண்பொடிச்சேர நின்றாடி நொய்யன செய்யலுகந்தார் கண்பொடிவெண்டலை யோடுகையேந்திக் காலனைக்காலாற் கடிந்துகந்தார் வெண்பொடிச் சேர்திருமார்பர் வேட்கள நன்னகராரே.
|
7
|
ஆழ்தருமால்கட னஞ்சினையுண்டார் அமுதமமரர்க் கருளிச் சூழ்தருபாம்பரை யார்த்துச் சூலமோடொண் மழுவேந்தித் தாழ்தருபுன்சடை யொன்றினைவாங்கித் தண்மதியம்மய லேததும்ப வீழ்தருகங்கை கரந்தார் வேட்கள நன்னகராரே.
|
8
|
திருவொளிகாணிய பேதுறுகின்ற திசைமுகனுந் திசைமேலளந்த கருவரையேந்திய மாலுங் கைதொழ நின்றதுமல்லால் அருவரையொல்க வெடுத்தவரக்க னாடெழிற்றோள்க ளாழத்தழுந்த வெருவுறவூன்றிய பெம்மான் வேட்கள நன்னகராரே.
|
9
|
அத்தமண்டோய்துவ ரார்அமண்குண்டர் யாதுமல்லாவுரை யேயுரைத்துப் பொய்த்தவம் பேசுவதல்லாற் புறனுரையாதொன்றுங் கொள்ளேல் முத்தனவெண்முறு வல்லுமையஞ்ச மூரிவல்லானையி னீருரிபோர்த்த வித்தகர்வேத முதல்வர் வேட்கள நன்னகராரே.
|
10
|
Go to top |
விண்ணியன்மாடம் விளங்கொளிவீதி வெண்கொடியெங்கும் விரிந்திலங்க நண்ணியசீர்வளர் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன் பெண்ணினல்லாளொரு பாகமமர்ந்து பேணியவேட்கள மேன்மொழிந்த பண்ணியல்பாடல் வல்லார்கள் பழியொடு பாவமிலாரே.
|
11
|