பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை யவனிறை இறையணி வளையிணை முலையவள் இணைவன தெழிலுடை யிடவகை கறையணி பொழினிறை வயலணி கழுமல மமர்கன லுருவினன் நறையணி மலர்நறு விரைபுல்கு நலமலி கழல்தொழன் மருவுமே.
|
1
|
பிணிபடு கடல்பிற விகளறல் எளிதுள ததுபெரு கியதிரை அணிபடு கழுமல மினிதமர் அனலுரு வினனவிர் சடைமிசை தணிபடு கதிர்வள ரிளமதி புனைவனை யுமைதலை வனைநிற மணிபடு கறைமிட றனைநலம் மலிகழ லிணைதொழன் மருவுமே.
|
2
|
வரியுறு புலியத ளுடையினன் வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி விரியுறு சடைவிரை புரைபொழில் விழவொலி மலிகழு மலமமர் எரியுறு நிறவிறை வனதடி யிரவொடு பகல்பர வுவர்தம தெரியுறு வினைசெறி கதிர்முனை யிருள்கெட நனிநினை வெய்துமதே.
|
3
|
வினைகெட மனநினை வதுமுடி கெனில்நனி தொழுதெழு குலமதி புனைகொடியிடைபொருள் தருபடு களிறின துரிபுதை யுடலினன் மனைகுட வயிறுடை யனசில வருகுறள் படையுடை யவன்மலி கனைகட லடைகழு மலமமர் கதிர்மதி யினனதிர் கழல்களே.
|
4
|
தலைமதி புனல்விட வரவிவை தலைமைய தொருசடை யிடையுடன் நிலைமரு வவொரிட மருளின னிழன்மழு வினொடழல் கணையினன் மலைமரு வியசிலை தனின்மதி லெரியுண மனமரு வினனல கலைமரு வியபுற வணிதரு கழுமல மினிதமர் தலைவனே.
|
5
|
Go to top |
வரைபொரு திழியரு விகள்பல பருகொரு கடல்வரி மணலிடை கரைபொரு திரையொலி கெழுமிய கழுமல மமர்கன லுருவினன் அரைபொரு புலியத ளுடையினன் அடியிணை தொழவரு வினையெனும் உரைபொடி படவுறு துயர்கெட வுயருல கெய்தலொரு தலைமையே.
|
6
|
முதிருறி கதிர்வள ரிளமதி சடையனை நறநிறை தலைதனில் உதிருறு மயிர்பிணை தவிர்தசை யுடைபுலி யதளிடை யிருள்கடி கதிருறு சுடரொளி கெழுமிய கழுமல மமர்மழு மலிபடை அதிருறு கழலடி களதடி தொழுமறி வலதறி வறியமே.
|
7
|
கடலென நிறநெடு முடியவன் அடுதிறல் தெறவடி சரணென அடனிறை படையரு ளியபுகழ் அரவரை யினனணி கிளர்பிறை விடநிறை மிடறுடை யவன்விரி சடையவன் விடையுடை யவனுமை உடனுறை பதிகடல் மறுகுடை யுயர்கழு மலவிய னகரதே.
|
8
|
கொழுமல ருறைபதி யுடையவன் நெடியவ னெனவிவர் களுமவன் விழுமையை யளவறி கிலரிறை விரைபுணர் பொழிலணி விழவமர் கழுமல மமர்கன லுருவினன் அடியிணை தொழுமவ ரருவினை எழுமையுமிலநில வகைதனில் எளிதிமை யவர்விய னுலகமே.
|
9
|
அமைவன துவரிழு கியதுகில் அணியுடை யினரம ணுருவர்கள் சமையமு மொருபொரு ளெனுமவை சலநெறி யனவற வுரைகளும் இமையவர் தொழுகழு மலமமர் இறைவன தடிபர வுவர்தமை நமையல வினைநல னடைதலில் உயர்நெறி நனிநணு குவர்களே.
|
10
|
Go to top |
பெருகிய தமிழ்விர கினன்மலி பெயரவ னுறைபிணர் திரையொடு கருகிய நிறவிரி கடலடை கழுமல முறைவிட மெனநனி பெருகிய சிவனடி பரவிய பிணைமொழி யனவொரு பதுமுடன் மருவிய மனமுடை யவர்மதி யுடையவர் விதியுடை யவர்களே.
|
11
|
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|