சிமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி அமையறிந் தோம்என்பர் ஆதிப் பிரானும் கமையறிந் தாருட் கலந்துநின் றானே.
|
1
|
பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர் நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர் ஏங்கி உலகில் இருந்தழு வாரே.
|
2
|
இருந்தழு வாரும் இயல்புகெட் டாரும் அருந்தவம் மேற்கொண்டங் கண்ணலை எண்ணில் வருந்தா வகைசெய்து வானவர் கோனும் பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.
|
3
|
தூரறி வாளர் துணைவன் நினைப்பிலர் பாரறி வாளர் படுபயன் தானுண்பர் காரறி வாளர் கரந்து பிறப்பர்கள் நீரறி வாளர் நெடுமுகி லாமே.
|
4
|
அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங் குறியது கண்டும் கொடுவினை யாளர் செறிய நினைக்கிலர் சேவடி தானே.
|
5
|
| Go to top |
மன்னும் ஒருவன் மருவு மனோமய னென்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள் துன்னி மனமே தொழுமின் துணையிலி தன்னையும் அங்கே தலைப்பட லாமே.
|
6
|
ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற் றாங்கார மற்ற அனுபவம் கைகூடார் சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார் நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. 19,
|
7
|