உரவு ஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும் கரவா வண்கைக் கற்றவர் சேரும் கலிக் காழி அரவு ஆர் அரையா! அவுணர் புரம் மூன்று எரி செய்த சரவா! என்பார் தத்துவஞானத் தலையாரே.
|
1
|
மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால்வாய் முரண் வேழக் கை போல் வாழை காய்குலை ஈனும் கலிக் காழி மை சேர் கண்டத்து எண்தோள் முக்கண் மறையோனே! ஐயா! என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே.
|
2
|
இளகக் கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ, களகப் புரிசைக் கவின் ஆர் சாரும் கலிக் காழி, அளகத் திரு நன்நுதலி பங்கா! அரனே! என்று உளகப் பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே.
|
3
|
எண் ஆர் முத்தம் ஈன்று, மரகதம் போல் காய்த்து, கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலிக் காழி, பெண் ஓர் பாகா! பித்தா! பிரானே! என்பார்க்கு நண்ணா, வினைகள்; நாள்தொறும் இன்பம் நணுகுமே.
|
4
|
மழை ஆர் சாரல் செம்புனல் வந்து அங்கு அடி வருட, கழை ஆர் கரும்பு கண்வளர் சோலைக் கலிக் காழி, உழை ஆர் கரவா! உமையாள் கணவா! ஒளிர்சங்கக்- குழையா! என்று கூற வல்லார்கள் குணவோரே.
|
5
|
Go to top |
குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலிக் காழி, வெறி ஆர் கொன்றைச் சடையா! விடையா! என்பாரை அறியா, வினைகள்; அருநோய், பாவம், அடையாவே.
|
6
|
உலம் கொள் சங்கத்து ஆர் கலி ஓதத்து உதையுண்டு, கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலிக் காழி, இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த சலம் கொள் சென்னி மன்னா! என்ன, தவம் ஆமே.
|
7
|
ஆவிக் கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ, காவிக் கண்ணார் மங்கலம் ஓவாக் கலிக் காழி, வில்-தோன்றும் புத்தேளொடு மாலவன் தானும் மேவிப் பரவும் அரசே! என்ன, வினை போமே.
|
8
|
மலை ஆர் மாடம், நீடு உயர் இஞ்சி, மஞ்சு ஆரும் கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலிக் காழித் தலைவா! சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா நிலையாய்! என்ன, தொல்வினை ஆய நில்லாவே.
|
9
|
வடி கொள் வாவிச் செங்கழு நீரில் கொங்கு ஆடிக் கடி கொள் தென்றல் முன்றிலில் வைகும் கலிக் காழி அடிகள் தம்மை, அந்தம் இல் ஞானசம்பந்தன் படி கொள் பாடல் வல்லவர் தம்மேல் பழி போமே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|