பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல் உடையவன்; நிறை இறை அணி வளை, இணை முலையவள், இணைவனது எழில் உடை இட வகை கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன்; நறை அணி மலர் நறுவிரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே!
|
1
|
பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது; உளது அது பெருகிய திரை; அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன், அவிர் சடை மிசை தணிபடு கதிர் வளர் இளமதி புனைவனை, உமைதலைவனை, நிற மணி படு கறைமிடறனை, நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே!
|
2
|
வரி உறு புலி அதள் உடையினன், வளர்பிறை ஒளி கிளர் கதிர் பொதி விரி உறு சடை, விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர் எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது எரி உறு வினை, செறிகதிர் முனை இருள் கெட, நனி நினைவு எய்துமதே.
|
3
|
வினை கெட மன நினைவு அது முடிக எனின், நனி தொழுது எழு குலமதி புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன், மனை குடவயிறு உடையனசில வரு குறள் படை உடையவன், மலி கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன், அதிர் கழல்களே!
|
4
|
தலைமதி, புனல், விட அரவு, இவை தலைமையது ஒரு சடை இடை உடன்- நிலை மருவ ஓர் இடம் அருளினன்; நிழல் மழுவினொடு அழல் கணையினன்; மலை மருவிய சிலைதனில் மதில் எரியுண மனம் மருவினன்-நல கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே.
|
5
|
Go to top |
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை, கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன்; அரை பொரு புலி அதள் உடையினன்; அடி இணை தொழ, அருவினை எனும் உரை பொடி பட உறு துயர் கெட, உயர் உலகு எய்தல் ஒருதலைமையே.
|
6
|
முதிர் உறு கதிர் வளர் இளமதி சடையனை, நற நிறை தலைதனில்; உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை; இருள் கடி கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை, அதிர் உறு கழல், அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே.
|
7
|
கடல் என நிற நெடுமுடியவன் அடுதிறல் தெற, அடி சரண்! என, அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன், அணி கிளர் பிறை, விடம் நிறை மிடறு உடையவன், விரிசடையவன், விடை உடையவன், உமை உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே.
|
8
|
கொழு மலர் உறை பதி உடையவன், நெடியவன், என இவர்களும், அவன் விழுமையை அளவு அறிகிலர், இறை; விரை புணர் பொழில் அணி விழவு அமர் கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர் அருவினை எழுமையும் இல, நில வகைதனில்; எளிது, இமையவர் வியன் உலகமே.
|
9
|
அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர், அமண் உருவர்கள், சமையமும், ஒரு பொருள் எனும் அவை, சல நெறியன, அற உரைகளும்; இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை நமையல வினை; நலன் அடைதலில் உயர்நெறி நனி நணுகுவர்களே!
|
10
|
Go to top |
பெருகிய தமிழ் விரகினன், மலி பெயரவன், உறை பிணர் திரையொடு கருகிய நிற விரிகடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி பெருகிய சிவன் அடி பரவிய, பிணை மொழியன, ஒருபதும் உடன்- மருவிய மனம் உடையவர் மதி உடையவர்; விதி உடையவர்களே.
|
11
|
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|