சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

8.105.06   மாணிக்க வாசகர்    திருவாசகம்

திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அறுசீர் விருத்தம்
உலக இன்பங்களைத் துறந்து, இறைவனை அடைய ஏங்கும் நிலை.
- Hide Meaning   https://sivaya.org/thiruvasagam2/05.06 Thirusadhagam.mp3   Add audio link Add Audio

ஈசனே! என் எம்மானே! எந்தை பெருமான்! என் பிறவி
நாசனே! நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாய் ஆன
நீசனேனை ஆண்டாய்க்கு, நினைக்கமாட்டேன் கண்டாயே:
தேசனே! அம்பலவனே! செய்வது ஒன்றும் அறியேனே.

51
இறைவா! பெருமை வாய்ந்த எம் தந்தையே! நீ பிறவி நோயைப் போக்கியுள்ளாய். சிற்றம்பலச் செழுஞ்சுடரே! உடல் உணர்ச்சியில் உழன்று கிடந்த என்னை நீ, உயர்ந்த பேறும் அடையப் பெற்றவன் ஆக்கினாய். உன்னை விட்டுப் பிழைபடுகிற மனத்தை உடைய எனக்கு, என்ன செய்வது என்று விளங்கவில்லை.

செய்வது அறியாச் சிறு நாயேன், செம் பொன் பாத மலர் காணாப்
பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்; பொய் இலா
மெய்யர் வெறி ஆர் மலர்ப் பாதம் மேவக் கண்டும், கேட்டிருந்தும்,
பொய்யனேன் நான் உண்டு, உடுத்து, இங்கு இருப்பது ஆனேன்: போர் ஏறே!

52
செய்ய வேண்டுவது இது என்று அறியாத நாயினேன் உன் திருவடியைக் காணாத பொய்யர் பெறும் பேறெல்லாம் பெறுதற்குரியேனாகி, உன் மெய்யன்பர் உன் திருவடியை அடையக் கண்டும் கேட்டும் அதனை அடைய முயலாமல் பொய்யனாய் உண்டும் உடுத்தும் காலம் கழிக்கின்றேன்.

போர் ஏறே! நின் பொன் நகர்வாய் நீ போந்தருளி, இருள் நீக்கி,
வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள, அருள் பெற்ற
சீர் ஏறு அடியார் நின் பாதம் சேரக் கண்டும், கண் கெட்ட
ஊர் ஏறு ஆய், இங்கு உழல்வேனோ? கொடியேன் உயிர் தான் உலவாதே!

53
இறைவனே! நீ உன் சிவபுரத்தில் நின்றும் எம் பிராட்டியோடும் இவ்விடத்து எழுந்தருளி அருள் செய்யப்பெற்ற உன் அன்பர், உன் திருவடியை அடையக் கண்டும், கண்கெட்ட ஊர் எருது போன்று இவ்வுலகத்தில் உழல்வேனோ? இத்தன்மையேனது உயிர் நீங்காதோ?

உலவாக் காலம் தவம் எய்தி, உறுப்பும் வெறுத்து, இங்கு உனைக் காண்பான்,
பல மா முனிவர் நனி வாட, பாவியேனைப் பணி கொண்டாய்;
மல மாக் குரம்பை இது மாய்க்க மாட்டேன்; மணியே, உனைக் காண்பான்,
அலவாநிற்கும் அன்பு இலேன்; என் கொண்டு எழுகேன், எம்மானே?

54
அளவில்லாத காலம் உடலை வெறுத்துத் தவம் புரிந்த பல முனிவரும் வருந்தி நிற்க, பாவியாகிய என்னைப் பணி கொண்டனை. அங்ஙனமாகவும் இந்தமல உடம்பை ஒழிக்க முயலேன். உன்னிடத்து அன்பு இல்லாத நான் இனி எவ்வகையால் உயர்வேன்?

மான் நேர் நோக்கி உமையாள் பங்கா! வந்து இங்கு ஆட்கொண்ட
தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! சிவனே! தென் தில்லைக்
கோனே! உன் தன் திருக்குறிப்புக் கூடுவார் நின் கழல் கூட,
ஊன் ஆர் புழுக்கூடு இது காத்து, இங்கு இருப்பது ஆனேன்; உடையானே!

55
மான்விழி போன்ற விழியினை உடைய அம்பிகையின் வலப்பாகா! சிதம்பர நாதா! நீ பரிபூரணப் பரம் பொருளாகத் தோன்றி உன் அடியார்க்கு அமிர்தம் ஆகின்றாய். உன்னை நினைவதே மானுட வாழ்க்கையின் குறிக்கோள் என்று நீ காட்டியருளியதை அறிந்து கொண்ட நின் அன்பர், உன்னையே நினைந்து உன்னை அடைந்தார். உன் உடைமையாகிய நானோ உடலையே நினைந்து நிலவுலகுக்கு உரியவன் ஆனேன்.
Go to top

உடையானே! நின் தனை உள்கி, உள்ளம் உருகும், பெரும் காதல்
உடையார், உடையாய்! நின் பாதம் சேரக் கண்டு, இங்கு ஊர் நாயின்
கடை ஆனேன், நெஞ்சு உருகாதேன், கல்லா மனத்தேன், கசியாதேன்,
முடை ஆர் புழுக் கூடு இது காத்து, இங்கு இருப்பது ஆக முடித்தாயே.

56
உயிர்கள் அனைத்தும், இறைவா! உனக்குச் சொந்தம் ஆயினும் பேரன்போடு உன்னையே நினைப்பவர் மட்டும் உன்னை அடைகின்றனர். இதை நான் கண்டிருந்தும் என் நெஞ்சம் உருகவில்லை. எனக்கு விவேகம் வரவில்லை. உள்ளக் கனிவு உண்டாகவில்லை. துர்நாற்றம் வீசும் உடலில் விருப்பம் வைத்து ஊர் நாய்க்கும் கீழ்ப்பட்டவனாக இங்கு வாழ்ந்து இருக்கிறேன்.

முடித்த ஆறும், என் தனக்கே தக்கதே; முன், அடியாரைப்
பிடித்த ஆறும், சோராமல் சோரனேன் இங்கு, ஒருத்தி வாய்
துடித்த ஆறும், துகில் இறையே சோர்ந்த ஆறும், முகம் குறு வேர்
பொடித்த ஆறும், இவை உணர்ந்து, கேடு என் தனக்கே சூழ்ந்தேனே.

57
நீ முடித்த விதம் எனக்குத் தக்கதே. நான் அடியவரைப்பற்றியிருந்தும், என்னை மாயையாகிய பெண் வருத்த வருந்தினேன். எனக்கு நானே கெடுதியுண்டாக்கிக் கொண்டேன்.

தேனை, பாலை, கன்னலின் தெளியை, ஒளியை, தெளிந்தார் தம்
ஊனை உருக்கும் உடையானை, உம்பரானை, வம்பனேன்,
நான் நின் அடியேன்; நீ என்னை ஆண்டாய்,' என்றால், அடியேற்குத்
தானும் சிரித்தே, அருளலாம் தன்மை ஆம், என் தன்மையே.

58
மனம் தெளிந்தவர்களுக்குப் பரமானந்தத்தை ஊட்டும் ஞானப் பிரகாசன் நீ. அவர்களுக்கு ஒப்பற்ற மேலாம் பொருள் நீ. மற்றுப் பக்குவம் அடையாத நான் உனக்கு அடிமை என்றும் நீ எனக்குத் தலைவன் என்றும், சொந்தம் பாராட்டினால் ஒரு புன்சிரிப்பின் மூலம் நீ அதை மறுப்பாய். உன் அருளுக்குத் தகுதியற்ற நான் அதற்குத் தகுதியுடையவன் என்று சொல்லுவது தகாது.

தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாய் ஆன
புன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ?
என்னை நோக்குவார் யாரே? என் நான் செய்கேன்? எம்பெருமான்!
பொன்னே திகழும் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே?

59
உன்னுடைய இயல்பு, பிறர் பலராலும் அறியப் பெறாதது. அத்தகைய இறைவனே! புன்மையுடைய என்னை ஆண்டருளிப் புறத்தே செல்ல விடுகிறாயோ? நீயே அப்படிச் செய்தால் நான் என் செய்வேன்? எவ்விடத்தில் புகுவேன்? என்னை நோக்குவோர் யார்?

புகுவேன், எனதே நின் பாதம்; போற்றும் அடியார் உள் நின்று
நகுவேன், பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன்.
நெகும் அன்பு இல்லை, நினைக் காண; நீ ஆண்டு அருள, அடியேனும்
தகுவனே? என் தன்மையே! எந்தாய், அந்தோ! தரியேனே!

60
இறைவனே! உன் திருவடிகளில் சரண் புகுவேன். உன் அடியார் நடுவில் கூடியிருந்து நகைத்தல் ஒன்றுமே செய்வேன். ஆனால் சரியான அன்பிலேன். இத்தகையோனான என்னை நீ ஆண்டருளல் தகுதியாமோ?
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்
8.101   மாணிக்க வாசகர்    திருவாசகம்   சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.01   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி
Tune - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.02   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - II. அறிவுறுத்தல் (11-20) நாடகத்தால் உன் அடியார்போல்
Tune - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.03   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - III. சுட்டறுத்தல் (21-30) வெள்ளம் தாழ் விரி சடையாய்!
Tune - வெள்ளம் தாழ் விரி சடையாய்!   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.04   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - IV ஆன்ம சுத்தி (31-40) ஆடுகின்றிலை; கூத்துஉடையான்
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.05   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - V கைம்மாறு கொடுத்தல் (41-50) இரு கை யானையை ஒத்து இருந்து
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.06   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - VI அநுபோக சுத்தி (51-60) ஈசனே! என் எம்மானே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.07   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - VII. காருணியத்து இரங்கல் (61-70) தரிக்கிலேன் காய வாழ்க்கை
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.08   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் -VIII. ஆனந்தத்து அழுந்தல் (71-80) புணர்ப்ப தொக்க எந்தை என்னை
Tune - ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.09   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் -IX . ஆனந்த பரவசம் (81-90) விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.10   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - X. ஆனந்தாதீதம் (91-100) மாறு இலாத மாக் கருணை வெள்ளமே
Tune - ஹரிவராசனம்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.120   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
Tune - புறநீர்மை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.123   மாணிக்க வாசகர்    திருவாசகம்   செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்
Tune - ஹரிவராசனம்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.124   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்
Tune - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.125   மாணிக்க வாசகர்    திருவாசகம்   ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்
Tune - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.126   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்
Tune - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.127   மாணிக்க வாசகர்    திருவாசகம்   புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
Tune - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.128   மாணிக்க வாசகர்    திருவாசகம்   வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்
Tune - அக்ஷரமணமாலை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.129   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அருட்பத்து - சோதியே சுடரே
Tune - அக்ஷரமணமாலை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.132   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.133   மாணிக்க வாசகர்    திருவாசகம்   குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.134   மாணிக்க வாசகர்    திருவாசகம்   உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.136   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்
Tune - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.138   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.141   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அற்புதப்பத்து - மைய லாய்இந்த
Tune - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.142   மாணிக்க வாசகர்    திருவாசகம்   சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.143   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவார்த்தை - மாதிவர் பாகன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.144   மாணிக்க வாசகர்    திருவாசகம்   எண்ணப்பதிகம் - பாருருவாய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.147   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
Tune - ஏரார் இளங்கிளியே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.148   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
Tune - ஏரார் இளங்கிளியே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.150   மாணிக்க வாசகர்    திருவாசகம்   ஆனந்தமாலை - மின்னே ரனைய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
12.900   கடவுண்மாமுனிவர்   திருவாதவூரர் புராணம்  
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org