கோயில் (சிதம்பரம்) - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி திருமுதுகுன்றத்தில் வழங்கிய பொன்னை, திருவாரூரில் தரும் படி வேண்டிக் கொண்டார். அப்பொழுது இப் பொன்னெல்லாவற்றையும் மணிமுத்தாற்றிலிட்டுத் திருவாரூர்க் குளத்தில் எடுத்துக் கொள்க என்றதோர் அருள் வாக்கு எழுந்தது. மாற்றறிதற்கு மச்சம் வெட்டி வைத்துக் கொண்டு பொன்னனைத்தையும் மணிமுத்தாற்றில் புகவிட்டு, அன்று என்னை வலிய ஆட்கொண்ட திருவருளை இதிலறிவேன் என்று கூறித் தில்லையை நோக்கிப் புறப்பட்டார். வழியில் கடம்பூரைத் தரிசித்துத் தில்லையம்பதியை அடைந்தார். தில்லைத் திருவீதியை வலம் வந்து கோபுரத்தை வணங்கிக் கோயிலினுட் சென்று பொன்னம்பலவனைத் தொழுதார். மாறிலா மகிழ்ச்சியில் திளைத்தவராய் மடித்தாடும் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
மனமே , நீ குஞ்சித்து ஆடுகின்ற தனது திருவடிக்குச் செய்யும் தொண்டின்கண் வாழாமல் உண்டு உடுத்தே வாழும் நாள்களிலும் , உன்னை அவ்வாறே சென்று கெடாதவாறு தடுத்து , தனது இச்சைவழி நடாத்தி , பின்பு நீ முன்செய்த பாவத்தின்பொருட்டு உன்னைக் கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனையும் தடுத்து ஆட்கொள்பவனாகிய , கையில் தமருகத்தையும் , நெருப்பு எரிகின்ற தகழியையும் , சினந்து ஆடுகின்ற கரிய பாம்பையும் பிடித்துக்கொண்டு ஆடுகின்ற , பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம் பலத்தில் விளங்குகின்ற நம்பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !
பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே, பிரியாது உள்கி, சீர் ஆர்ந்த அன்பராய், சென்று, முன் அடி வீழும் திருவினாரை, ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான், பேராளர் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
மனமே , சாங்காறும் , நீங்காது உலக இன்பத்தில் சென்றவர்போலவன்றி , புகழ் நிறைந்த அன்பையுடையவர்களாய் , தன்னை இடைவிடாது நினைத்து , திருமுன் சென்று தனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் திருவுடையவரை , அவரது நிலையை அறியாமல் , கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய , பெருமையுடையவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !
நரியார் தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து, நாளும் உள்கி, பிரியாத அன்பராய், சென்று, முன் அடி வீழும் சிந்தையாரை, தரியாது தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான், பெரியோர்கள் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
மனமே , நரியினது வஞ்சனைபோலும் வஞ்சனை யினால் இரண்டுபட்ட தன்மையின் நீங்கி , நாள்தோறும் தன்னை நினைத்து , மாறுபடாத அன்பை உடையவராய்த் திருமுன்சென்று , தனது திருவடியில் வீழ்ந்து வணங்குங் கருத்துடையவரை , கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது சிறிதும் தாழாது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய , பெரியோர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !
கருமை ஆர் தருமனார் தமர் நம்மைக் கட்டிய கட்டு அறுப்பிப்பானை; அருமை ஆம் தன் உலகம் தருவானை; மண்ணுலகம் காவல் பூண்ட உரிமையால் பல்லவர்க்குத் திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும், பெருமை ஆர் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
மனமே , கருமை நிறம் பொருந்திய கூற்றுவனது ஏவலர் நம்மைக் கட்டுவராயின் , அக் கட்டினை அறுத்தெறிபவனும் , நமக்கு , பிறர் பெறுதற்கரிய தனது உலகத்தையே தருபவனும் , பல்லவ மன்னன் இந்நிலவுலகத்தை நன்நெறியில் வைத்துக் காத்தலை மேற் கொண்ட இயைபினால் , அவனுக்குத் திறைகொடாது மாறுபடும் பிற மன்னர்களை வருத்துதல் செய்கின்றவனும் ஆகிய , பெருமை யுடையவர்களது பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !
மனமே , யானையினது தோலைப் போர்வையாக உடைய , சிவந்த சடைமேல் வெள்ளிய பிறையாகிய கண்ணியைச் சூடினவனும் , இடிபோல முழங்கும் கூற்றுவனை நிலத்தில் உருண்டு ஒழியும்படி உதைத்துப் பின் அருள் செய்து , அவனால் வெருட்டப் பட்ட சிறுவனுக்கு அழியாத இன்பத்தைத் தந்தவனும் , நம்மை , அக்கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் ஆகிய , பெருமை நீங்காதவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !
மனமே , படம் எடுத்து ஆடும் பாம்பையும் , விரிந்த சடையையும் உடையவனும் , மேலான ஒளியாய் உள்ளவனும் , அடைந்தவரது பாவங்களை நீக்குகின்றவனும் , பித்துக்கொண்டு ஆடுகின்றவனும் ஆகிய , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம் பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோ மன்றே ; இனி நாம் பெற வேண்டுவது யாது ! இதனால் , நமக்கு எதனா லும் குறைவில்லாத வாழ்வு உளதாயிற்று என்று நம்மை நாள்தோறும் பலரும் புகழ்கின்றனர் ; ஆதலின் , மனமே , இனி நீ , உடம்பின் மேற் கண்ணோட்டம் செலுத்தி அலைந்து திரியாது , அதனை முற்றிலும் ஒழி .
முட்டாத முச்சந்தி மூ ஆயிரவர்க்கும் மூர்த்தி என்னப்- பட்டானை, பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போக விட்டானை, மலை எடுத்த இராவணனைத் தலைபத்தும் நெரியக் காலால்- தொட்டானை, புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
மனமே , ` தப்பாத , முப்போதும் செய்யும் வழி பாட்டினையுடைய மூவாயிரவர் அந்தணர்க்கும் ஒரு மூர்த்தியே ` என்று அனைவராலும் சொல்லப்பட்டவனும் , அடியவராய் நின்று தன்னை நினைப்பவரது , பாவமும் புண்ணியமும் ஆகிய இரு வினைகளும் விலகுமாறு நீக்குகின்றவனும் , தனது மலையை எடுத்த இராவணனை , அவனது பத்துத் தலைகளும் நெரியும்படி காலால் ஊன்றினவனும் ஆகிய , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச் சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே , இனி நாம் பெறவேண்டுவது யாது !
கல்-தானும் குழையும் ஆறு அன்றியே, கருதுமா கருத கிற்றார்க்கு, எற்றாலும் குறைவு இல்லை என்பர்காண்; உள்ளமே! நம்மை நாளும்- செற்று ஆட்டித் தருமனார் தமர் செக்கில் இடும்போது-தடுத்து ஆட்கொள்வான், பெற்றேறி,(ப்) புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
மனமே , கல்லும் தன் தன்மை மாறி உருகும்படி , தன்னை நினைக்கும் முறையில் நினைக்க வல்லராயினார்க்கு , எத்தன்மைத்தாய பொருளாலும் குறைவில்லை என்று பெரியோர் சொல்லுவர் ; அவ்வகையில் நாம் , நம்மை , கூற்றுவனது ஏவலர்கள் பலகாலும் ஆட்டக்கருதிச் செக்கிலிட முயலும்போது , அதனைத் தடுத்து ஆட்கொள்ளுகின்ற , விடையேறுபவனாகிய , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கும் நம் பெரு மானை அடைந்துவிட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !
நாடு உடைய நாதன் பால் நன்று என்றும் செய், மனமே! நம்மை நாளும், தாடு உடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்; மோடு உடைய சமணர்க்கும், முடை உடைய சாக்கியர்க்கும், மூடம் வைத்த, பீடு உடைய-புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
மனமே , நம்மை , தலைமையையுடைய கூற்றுவனது ஏவலர் பலநாளும் செக்கிலிட்டு ஆட்ட முயலும்போது , அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் , முடைநாற்றத்தையுடைய சமணர்கட்கும் , வயிற்றையுடைய சாக்கியர்கட்கும் அறியாமையை வைத்த பெருமையை யுடையவனும் ஆகிய , பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டியது யாது ! அதனால் , உயர்ந்தோரால் விரும்பப்படுதலையுடைய அவ்விறைவனிடத்தில் என்றும் நன்றாய தொண்டினைச் செய் .
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன்; பைங்கண் ஏற்றன்; ஊர் ஊரன்; தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்; ஆரூரன் தம்பிரான்; ஆரூரன்; மீ கொங்கில் அணி காஞ்சிவா அய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே!
மனமே , நிலத்தில் ஊர்ந்து செல்கின்ற பாம்பினது படம்போலும் அல்குலையுடைய ` உமை ` என்னும் நங்கையது பாகத்தையுடையவனும் , பசிய கண்களையுடைய இடபத்தை யுடைய வனும் , ஊர் தோறும் எழுந்தருளியிருப்பவனும் நம்மை , கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும் போது அதனைத் தடுத்து ஆட்கொள் பவனும் , நம்பியாரூரனுக்குத் தலைவனும் , திருவாரூரை உடையவனும் , மேற்றிசையில் உள்ள கொங்கு நாட்டில் , அழகிய காஞ்சிநதியின் கரையில் விளங்கும் பேரூரில் உள்ளவரது கடவுளும் ஆகிய இறைவனை , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !