கூற்றுவனை , அவன் உயிரற்று விழுமாறு , காலால் உதைத்த கயிலாய நாதனும் , நடை நிரம்பாத எருதினை ஏறுதலை விரும்பியவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக்கொண்ட ஊர் , ` திருக்கோவலூர் , தாழையூர் , தகட்டூர் , தக்களூர் , தருமபுரம் , வாழைகள் காய்க்கின்ற , செல்வம் வளர்கின்ற மருகல் நாட்டில் உள்ள மருகல் ` என்பவை .
இவ்வண்டத்திற்கு அப்பால் உள்ள அண்டங்களுக்கும் அப்பால் நின்று நடனம் ஆடுகின்ற அமுதமாய் உள்ள இறைவனது தலங்கள் , ` தண்டந்தோட்டம் , தண்டங்குறை , தண்டலை , ஆலங்காடு , கடல் முள்ளியும் தாழையும் சூழ்ந்த கழிப்பாலை , கடற்கரை , கொண்டல் நாட்டிலுள்ள கொண்டல் , குறுக்கை நாட்டிலுள்ள குறுக்கை ` என்பவை .
மூலனூர், முதல் ஆய முக்கண்ணன்-முதல்வனூர், நாலனூர், நரை ஏறு உகந்து ஏறிய நம்பன், ஊர் கோலம் நீற்றன்-குற்றாலம், குரங்கணில் முட்டமும், வேலனூர், வெற்றியூர், வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே.
எமக்குத் துணையாய் வரும் தலைவனும் , எப்பொருட்கும் மேலானவனும் , எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் உள்ளவனும் ஆகிய இறைவன் நீங்காது வாழும் அழகு மிகுந்த ஊர்கள் , ` தேங்கூர் , சிற்றம்பலம் , சிராப்பள்ளி , அழகு மிக்க கடம்பந்துறை , நாங்கூர் நாட்டிலுள்ள நாங்கூர் , நறையூர் நாட்டிலுள்ள நறையூர் ` என்பவை .
குழலை வென்ற மொழி மடவாளை ஓர் கூறன் ஆம், மழலை ஏற்று, மணாளன் இடம் தடமால்வரைக் கிழவன்-கீழை வழி, பழையாறு, கிழையமும், மிழலை நாட்டு மிழலை, வெண்ணி நாட்டு மிழலையே.
தென்னூர், கைம்மைத் திருச் சுழியல்,-திருக்கானப்பேர், பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம், பாய் நலம் என் ஊர் எங்கள் பிரான் உறையும் திருத் தேவனூர், பொன்னூர் நாட்டுப் பொன்னூர், புரிசை நாட்டுப் புரிசையே.
சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தலங்களிலே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு இடமாய் , பரவிய புகழையுடையன எவ்வூர்கள் எனின் , அவை , எங்கள் பெருமான் எழுந்தருளியுள்ள , ` தென்னூர் , ஒழுக்கம் நிறைந்த சுழியல் , கானப்பேர் , தேவனூர் , பொன்னூர் நாட்டிலுள்ள பொன்னூர் , புரிசை நாட்டிலுள்ள புரிசை` என்பவை .
ஈழ நாட்டு மாதோட்டம், தென்நாட்டு இராமேச்சுரம், சோழ நாட்டுத் துருத்தி, நெய்த்தானம், திருமலை, ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய கீழையில், அரனார்க்கு இடம் கிள்ளி குடி அதே .
சிவபெருமானாருக்கு உரிய தலங்கள் , ஈழநாட்டில் உள்ள மாதோட்டம் , தென்னாட்டில் உள்ள இராமேச்சுரம் , சோழநாட்டிலுள்ள துருத்தி , நெய்த்தானம் , திருமலை , கடல் சூழ்ந்த நிலவுலகிற் கெல்லாம் அணியாய் விளங்கும் கீழையில் , கிள்ளிகுடி என்பவை .
நாளும் நன்னிலம், தென் பனையூர், வட கஞ்சனூர், நீள நீள் சடையான் நெல்லிக்காவு, நெடுங்களம், காள கண்டன் உறையும் கடைமுடி, கண்டியூர், வேளார் நாட்டு வேளூர், விளத்தூர் நாட்டு விளத்தூரே.
தழல் போல ஒளிவிடும் திருமேனியை உடையவனும் , மங்கையை ஒரு பங்கில் விரும்பிவைத்துள்ளவனும் , தன்னைத் தொழுதவுடன் தொழுதவரது பழவினையை அறுக்கின்ற ஒளியாய் உள்ளவனும் , கழல் அணிந்த மணிவடத்தை உடையவனும் , ஆகிய இறைவன் விரும்புகின்ற தலங்கள் , ` சோற்றுத்துறை , பழனம் , பாம்பணி , பாம்புரம் , தஞ்சை , தஞ்சாக்கை ` என்பவை .
மை கொள் கண்டன், எண்தோளன், முக்கண்ணன், வலஞ்சுழி பை கொள் வாள் அரவு ஆட்டித் திரியும் பரமன், ஊர் செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திருப் புன்கூர், நன்று ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே .
கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடையவனும் , படத்தைக்கொண்ட கொடிய பாம்பை ஆட்டித் திரியும் மேலவனுமாகிய இறைவனுடைய தலங்கள் , ` வலஞ்சுழி , வயல்களில் வாளை மீன்கள் மேலெழுந்து பாய்ந்து பிறழ்கின்ற திருப்புன்கூர் , அவன் மிக விரும்பிய , சோலையை உடைய அழகிய ஆவடுதுறை ` என்பவை .
நாடுகளில் எல்லாம் விரும்பித் திரியும் பெருமானும் , அடியார்கள் தமக்குத் தலைவனாக அறிந்து தொழப்படுகின்ற முதல்வனும் ஆகிய இறைவனை , நாணுடையவளாகிய ` வனப்பகை ` என்பவளுக்குத் தந்தையும் , இறைவன்முன் வன்மை பேசிப் பின் அவனுக்குத் தொண்டன் ஆகியவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைத் தாளத்தொடு பாடித் துதிப்பவர் அடையும் இடம் சிவலோகமேயாம் .