| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://www.youtube.com/watch?v=6JewIhBJ_x0 Add audio link
6.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் அருள்தரு பெண்ணினல்லாளம்மை உடனுறை அருள்மிகு வேதகிரீசுவரர் திருவடிகள் போற்றி
மூ இலை வேல் கையானை, மூர்த்தி தன்னை, முது பிணக்காடு உடையானை, முதல் ஆனானை,
ஆவினில் ஐந்து உகந்தானை, அமரர் கோனை, ஆலாலம் உண்டு உகந்த ஐயன் தன்னை,
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வு அரிய பெருமானை, புனிதன் தன்னை,
காவலனை, கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.
1
மூவிலை வேலாகிய சூலத்தைப் பிடித்த கையினனும் , அழகிய கடவுளும் , பிணமுதுகாட்டை உடையவனும் , எல்லாவற்றிற்கும் அடியானவனும் , தேவர்களுடைய அரசனும் , ஆல கால விடத்தை மகிழ்ந்துண்ட தலைவனும் , தாமரைமேல் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் வணங்குதற்கு நெருங்க முடியாத பெருமானும் , புனிதனும் , எல்லாவற்றையும் காப்பவனும் , கழுக்குன்றில் அமர்ந்தவனும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக்கண்டேன் .
பல் ஆடுதலை சடை மேல் உடையான் தன்னை, பாய் புலித்தோல் உடையானை, பகவன் தன்னை,
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை, சுடர் உருவில் என்பு அறாக் கோலத்தானை,
அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை, ஆலின் கீழ் இருந்தானை, அமுது ஆனானை,
கல் ஆடை புனைந்து அருளும் காபாலி(ய்)யை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.
2
பற்கள் வெளியே தோன்றுகின்ற வெண் தலையைச் சடைமேல் தரித்தவனும் , பாயும் புலியை உரித்துக்கொண்ட தோலாகிய உடையினனும் , சிறந்த ஆறு குணங்களை உடையவனும் , சொற்களும் பொருள்கள் எல்லாமும் ஆனவனும் , என்புஅணி நீங்கப்பெறாத தோற்றத்துடன் ஒளிவிட்டுத் திகழ்பவனும் , முறை யல்லாத செயலை மேற்கொண்ட காலனை முன் ஒறுத்தவனும் , ஆலின் கீழ் இருந்தவனும் , அமுதமானவனும் , கல்லாடை புனைந்தருளும் காபாலியும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக் கண்டேன் .
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்கழுக்குன்றம்
1.103
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடையான் ஒரு காதில்-தூய
Tune - குறிஞ்சி
(திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
6.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
மூ இலை வேல் கையானை,
Tune - திருத்தாண்டகம்
(திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
7.081
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கொன்று செய்த கொடுமையால் பல,
Tune - நட்டபாடை
(திருக்கழுக்குன்றம் வேதகிரியீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
8.130
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு
Tune -
(திருக்கழுக்குன்றம் )