சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.028   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாரூர் - திருத்தாண்டகம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=9zK-eWS155o   Add audio link Add Audio

நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்; நீங்காமே வெள் எலும்பு பூண்டார்போலும்;
காற்றினையும் கடிது ஆக நடந்தார்போலும்; கண்ணின்மேல் கண் ஒன்று உடையார்போலும்;
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார்போலும்; கொல் புலித் தோல் ஆடைக் குழகர்போலும்;
ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தார்போலும்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

1
அழகிய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள பெருமானார் நெற்றிக்கண் ஒன்று உடையாராய் , நெற்றியில் திருநீறு அணிந்தவராய் , வெள்ளிய எலும்புகளை விடாமல் அணிந்தவராய்க் காற்றைவிட விரைவாகச் செல்பவராய் , ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியால் கூற்றுவனை உதைத்தவராய்த் தம்மால் கொல்லப்பட்ட புலித்தோல் ஆடையை உடுத்த இளையராய்க் கங்கையையும் சடை மேல் வைத்தவராய் , அகக்கண்களுக்குக் காட்சி நல்குகிறார் .

பரியது ஓர் பாம்பு அரைமேல் ஆர்த்தார்போலும்; பாசுபதம் பார்த்தற்கு அளித்தார்போலும்;
கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார்போலும்; காபாலம் கட்டங்கக் கொடியார்போலும்;
பெரியது ஓர் மலை வில்லா எய்தார்போலும்; பேர் நந்தி என்னும் பெயரார்போலும்;
அரியது ஓர் அரணங்கள் அட்டார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

2
அணி ஆரூர்த் திருமூலட்டானனார் பருத்த பாம்பினை இடையில் இறுக்க அணிந்தவராய் , அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் வழங்கியவராய்க் கரிய யானைத் தோலினைப் போர்த்தவராய் , மண்டை ஓட்டினையும் கட்டங்கப் படை எழுதிய கொடியினையும் உடையவராய்ப் பெரிய மலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்தவராய் , நந்தி என்ற பெயரினையும் உடையவராய்ப் பகைவருடைய அழித்தற்கரிய மும்மதில்களையும் அழித்தவராய் , நம் மனக்கண் முன் காட்சி வழங்குகின்றார் .

துணி உடையர், தோல் உடையர், என்பார்போலும்; தூய திருமேனிச் செல்வர்போலும்;
பிணி உடைய அடியாரைத் தீர்ப்பார்போலும்;   பேசுவார்க்கு எல்லாம் பெரியார்போலும்;
மணி உடைய மா நாகம் ஆர்ப்பார்போலும்; வாசுகி மா நாணாக வைத்தார் போலும்;
அணி உடைய நெடுவீதி நடப்பார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

3
கீளூம் கோவணமும் ஆகிய குறைந்த உடைகளையும் தோல் உடையையும் உடையவராய்த் தூய திருமேனியை உடைய செல்வராய் , அடியார்களுடைய பிணிகளை நீங்குமாறு போக்குபவராய் , மொழியைக் கடந்த பெரும்புகழாளராய் , இரத்தினங்களை உடைய மேம்பட்ட நாகங்களை அணிந்தவராய் , வாசுகி என்ற பாம்பினைத் தம் வில்லின் நாணாகக் கொண்டவராய் , அழகிய நீண்ட வீதிகளில் உலாவுபவராய் , அழகிய ஆரூர்ப் பெருமானார் மனக்கண் முன் காட்சி வழங்குகிறார் .

ஓட்டு அகத்தே ஊண் ஆக உகந்தார்போலும்; ஓர் உரு ஆய்த் தோன்றி உயர்ந்தார்போலும்;
நாட்டு அகத்தே நடைபலவும் நவின்றார்போலும்; ஞானப்பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்;
காட்டு அகத்தே ஆடல் உடையார்போலும்; காமரங்கள் பாடித் திரிவார்போலும்;
ஆட்டு அகத்தில் ஆன் ஐந்து உகந்தார்போலும்   அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

4
அணி ஆரூர்த் திருமூலட்டானனார் மண்டை யோட்டில் பிச்சையெடுக்கும் உணவையே விரும்பியவராய் , அனற் பிழம்பாய்த் தோன்றி அடிமுடி காண முடியாதவாறு உயர்ந்தவராய் , நாட்டிலே மக்கள் பயின்று வரப் பல நெறிகளையும் கூறியவராய் , ஞானப் பெருங்கடலுக்கு உரிமை பூண்ட தலைவராய்ச் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவராய் சீகாமரம் என்ற பண்ணில் அமைந்த பாடல்களைப் பாடித்திரிபவராய்ப் பஞ்சகவ்விய அபிடேகத்தை உகப்பவராய் நம்மனக்கண் முன் காட்சி வழங்குகிறார் .

ஏனத்து இள மருப்புப் பூண்டார்போலும்; இமையவர்கள் ஏத்த இருந்தார்போலும்;
கானக் கல்லால்கீழ் நிழலார்போலும்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர்போலும்;
வானத்து இளமதி சேர் சடையார்போலும்; வான் கயிலைவெற்பில் மகிழ்ந்தார்போலும்;
ஆனத்து முன் எழுத்து ஆய் நின்றார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

5
பன்றியின் முற்றாத கொம்பினை அணிந்தவராய்த் தேவர்கள் வழிபடும்படியாகத் தங்கியிருப்பவராய்க் காட்டில் உள்ள கல்லால மரத்தின் கீழ் அமர்ந்தவராய்க் கடல் நஞ்சினை உண்டு கறுத்த கழுத்தினராய்ப் பிறை சேர்ந்த சடையினராய் , உயர்ந்த கயிலை மலையை உகந்து உறைபவராய் , அகரமாகிய எழுத்து ஏனைய எழுத்துக்களின் தோற்றத்துக்குக் காரணமாக இருப்பது போல ஏனைய பொருள்களுக்கெல்லாம் காரணராய் , காளையை இவர்ந்தவராய் அடியவர்கள் மனக்கண்முன் அழகிய ஆரூர்ப் பெருமானார் காட்சி வழங்குகிறார் .
Go to top

காமனையும் கரி ஆகக் காய்ந்தார்போலும்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர்போலும்;
சோமனையும் செஞ்சடைமேல் வைத்தார்போலும்;
சொல் ஆகிச் சொல்பொருள் ஆய் நின்றார்போலும்;
நா மனையும் வேதத்தார் தாமேபோலும்; நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர்போலும்;
ஆ(ம்)மனையும் திருமுடியார் தாமேபோலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

6
அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் மன்மதனைச் சாம்பலாகுமாறு கோபித்துக் கடல் விடத்தை உண்டு நீலகண்டராய்ப் பிறையையும் சடையில் சூடிச் சொல், சொற்பொருள், நாவால் உச்சரிக்கப்படும் வேதம் இவற்றின் வடிவினராய்ப் பார்வதி பாகராய்க் கங்கையை முடியில் வைத்தவராய் அடியவர் மனக் கண்ணுக்குக் காட்சி வழங்குகிறார்.

முடி ஆர் மதி, அரவம், வைத்தார்போலும்; மூ உலகும் தாமே ஆய் நின்றார்போலும்;
செடி ஆர் தலைப் பலி கொண்டுஉழல்வார்போலும்; செல் கதிதான் கண்ட சிவனார்போலும்;
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட கண்டர்போலும்; கங்காளவேடக் கருத்தர்போலும்;
அடியார் அடிமை உகப்பார்போலும்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

7
அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் முடியில் பிறையும் பாம்பும் சூடி , மூவுலகும் தாமேயாய்ப் பரந்து புலால் நாற்றம் கமழும் மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிந்து வீடுபேற்றிற்கு உரிய வழியைக் காட்டி மற்றவர் நீக்கும் நஞ்சுண்டு நீல கண்டராய் , எலும்புக்கூட்டினை அணிந்த வேடத்தை உடைய தலைவராய் , அடியார்களுடைய அடிமைப் பணியினை உகப்பவராய் மனக்கண்முன் அடியவர்க்குக் காட்சி வழங்குகின்றார் .

இந்திரத்தை இனிது ஆக ஈந்தார்போலும்; இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர்போலும்;
சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார்போலும்; தூத் தூய திருமேனித் தோன்றல்போலும்;
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார்போலும்; மா நாகம் நாண் ஆக, வளைத்தார்போலும்;
அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

8
அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் இந்திர பதவியைத் தக்கவருக்கு மகிழ்வோடு ஈந்து , தேவர்கள் வந்து வழிபடும் தலைவராய் அழகிய நீறு பூசி , மிகவும் தூய திருமேனியை உடைய தலைவராய் , அடியவர்கள் உள்ளத்தே தம் திருவைந்தெழுத்தை நிலையாக அமைத்து வாசுகியைத் தம் மலைவில்லின் நாணாக வில்லினை வளைத்து இணைத்து , அழகிய நிலைபெற்ற அணியாகுமாறு விடம் உண்டு நீலகண்டராய் நம்மனக்கண்முன் காட்சி வழங்குகின்றார் .

பிண்டத்தைக் காக்கும் பிரானார்போலும்; பிறவி, இறவி, இலாதார்போலும்;
முண்டத்து முக்கண் உடையார்போலும்; முழுநீறு பூசும் முதல்வர்போலும்;
கண்டத்து இறையே கறுத்தார்போலும்;   காளத்தி, காரோணம், மேயார்போலும்;
அண்டத்துக்கு அப்புறம் ஆய் நின்றார்போலும்-   அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

9
எல்லா உடம்புகளையும் பாதுகாக்கும் தலைவரான திருவாரூர்ப் பெருமானார் பிறப்பு இறப்பு அற்றவராய் , நெற்றியில் மூன்றாவது கண்ணை உடையவராய் , உடல் முழுதும் நீறு பூசும் தலைவராய்க் கழுத்து சிறிதே கறுத்தவராய்க் காளத்தி , குடந்தை , நாகை என்ற காரோணப்பதிகள் ஆகியவற்றை உகந்தருளியிருப்பவராய் அண்டத்துப் புறத்தும் உள்ளவராய் நம் மனக்கண்முன் காட்சி வழங்குகிறார் .

ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார்போலும்; ஊழிபல கண்டு இருந்தார்போலும்;
பெருகாமே வெள்ளம் தவிர்த்தார்போலும்; பிறப்பு, இடும்பை, சாக்காடு, ஒன்று இல்லார்போலும்;
உருகாதார் உள்ளத்து நில்லார்போலும்; உகப்பார்தம் மனத்து என்றும் நீங்கார்போலும்;
அருகு ஆக வந்து என்னை, அஞ்சல்! என்பார்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

10
அணி ஆரூர்த் திருமூலத்தானப் பெருமான் ஒரு காலத்தில் தாம் ஒருவரேயாகிப் பல ஊழிக் காலங்களையும் கண்டு , கங்கையைப் பெருகாதபடி சடையில் கொண்டு தவிர்த்து , பிறப்பு துயரம் சாக்காடு என்பன இல்லாதவராய் , உருகாத மனத்தவர் உள்ளத்தில் உகந்து தங்காதவராய் , தம்மை விரும்புவர் உள்ளத்தை என்றும் நீங்காதவராய் அருகில் வந்து எனக்கு அஞ்சேல் என்று அருள் செய்பவர் ஆவர் .
Go to top

நன்றாக நடைபலவும் நவின்றார்போலும்; ஞானப்பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்;
கொன்றாகிக் கொன்றது ஒன்று உண்டார்போலும்; கோள் அரக்கர்கோன் தலைகள் குறைத்தார்போலும்;
சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார்போலும்; திசை அனைத்தும் ஆய், அனைத்தும் ஆனார்போலும்;
அன்று ஆகில், ஆயிரம் பேரார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

11
அணி ஆரூர்த் திருமூலட்டானப் பெருமானார் நல்ல ஒழுக்க நெறிகளை நூல்கள் வாயிலாக அறிவித்து ஞானப்பெருங்கடற்கு உரிமை உடைய தலைவராய் , வேள்வியில் கொல்லப்பட்டதனை வேள்வி செய்யும் அடியவர் உகப்பிற்காக நுகர்பவராய் , இராவணன் தலைகள் பத்தினையும் நசுக்கியவராய்ப் பகைவருடைய திரிபுரங்களை அம்பு எய்து அழித்தவராய்த் திசைகளிலும் திசைகளில் உள்ள பொருள்களிலும் பரவியவராய் , ஒரு பெயரும் அவருடைய பெயர் அன்று ஆயினும் அடியார் உகப்பிற்காக ஆயிரம் திருநாமங்களை உடையவராய் , அடியவர்கள் மனக்கண்ணுக்குக் காட்சி வழங்குகின்றார் . சென்றார் - மெலித்தல் விகாரம் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாரூர்
1.091   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
1.105   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
2.079   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
2.101   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
3.045   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.020   திருநாவுக்கரசர்   தேவாரம்   காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.021   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.101   திருநாவுக்கரசர்   தேவாரம்   குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்   (திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
4.102   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.024   திருநாவுக்கரசர்   தேவாரம்   கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.025   திருநாவுக்கரசர்   தேவாரம்   உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.026   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாதித் தன் திரு உருவில்
Tune -   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.027   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற  
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.028   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.031   திருநாவுக்கரசர்   தேவாரம்   இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.032   திருநாவுக்கரசர்   தேவாரம்   கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.033   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.034   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
7.008   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.012   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்   (திருவாரூர் )
7.033   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி   (திருவாரூர் )
7.037   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.039   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருவாரூர் )
7.047   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்   (திருவாரூர் )
7.051   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.059   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.073   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.083   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.095   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
8.139   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி   (திருவாரூர் )
9.018   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா   பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -   (திருவாரூர் )
11.007   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை   திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -   (திருவாரூர் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000