![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://www.youtube.com/watch?v=hUJDOFGkh8k Add audio link
4.105
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருப்புகலூர் - திருவிருத்தம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி
தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன்; தன் அடி அடைய,
புன்னைப் பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோ!
என்னைப் பிறப்பு அறுத்து, என் வினை கட்டு அறுத்து, ஏழ் நரகத்து
என்னைக் கிடக்கல் ஒட்டான், சிவலோகத்து இருத்திடுமே.
1
புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளை உடைய திருப்புகலூர்ப் பெருமானை அடைக்கலமாகப் பற்றி அவன் திருவடிகளை அடைந்தேன். தன் திருவடிகளை அடைக்கலமாக அடைந்த அளவில் அவன் செய்வனவற்றைக் கேளுங்கள். என் பிறவிப் பிணியைப் போக்கி என் வினையாகிய கட்டினை அறுத்து நீக்கி எழு வகைப்பட்ட நரகத்தில் என்னைக் கிடக்குமாறு விடாமல் சிவலோகத்தில் கொண்டு சேர்த்து விடுவான்.
பொன்னை வகுத்தன்ன மேனியனே! புணர் மென் முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே, தமியேற்கு இரங்காய்!
புன்னை மலர்த்தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே!
என்னை வகுத்திலையேல், இடும்பைக்கு இடம் யாது? சொல்லே!
2
பொன்னார் மேனியனே! பார்வதி பாகனே! தனித்து வருந்தும் அடியேனுக்குக் கருணை செய்வாயாக. புன்னை மலர்களிலே வண்டுகள் உறங்கும் புகலூர்த் தலைவனே! யான் இல்லேனாயின் துன்பம் தங்குவதற்கு வேறு இடம் யாது உள்ளது?
பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய்! புகலூர்க்கு அரசே!
மன் உள தேவர்கள் தேடும் மருந்தே! வலஞ்சுழியாய்!-
என் அளவே, உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்!
உன் அளவே, எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே!
3
பொன்னை ஒத்த நீண்ட சடைக்கண் கொன்றைப் பூவை அணிந்தவனே! புகலூருக்கு அரசனே! பெருமையை உடைய தேவர்கள் தேடும் அமுதமே! திருவலஞ்சுழிப்பெருமானே! எனக்குச் சிறிதும் இரக்கம் காட்டாத மேம்பட்ட பண்பினனே! உனக்கு அடிமையாக அமைந்தும் கட்டுக்கும் வீட்டுக்கும் இடையே கிடப்பவர் என்னைத் தவிர உன் அடியவருள் வேறு யாவர் உளர்?
ஓணப் பிரானும், ஒளிர் மா மலர்மிசை உத்தமனும்,
காணப் பராவியும் காண்கின்றிலர்; கரம் நால்-ஐந்து உடைத்
தோள் நப்பிரானை வலி தொலைத்தோன், தொல்லைநீர்ப் புகலூர்க்
கோணப்பிரானைக் குறுக, குறுகா, கொடுவினையே.
4
திருவோணநாளுக்குத் தலைவனான திருமாலும் பிரகாசிக்கும் பெரிய தாமரைமலரில் உறையும் பிரமனும் உன்னைக் காண்பதற்காக வேண்டியும் காண இயலாதவர் ஆயினர். இருபது தோள்களை உடைய மேம்பட்ட தலைவனாகச் செருக்குக் கொண்ட இராவணனுடைய வலிமையை அழித்தவனாகிய, பண்டு தொட்டு நீர்வளம் மிக்க புகலூரில் உறையும் சாய்ந்த திருமேனியை உடைய பிரானை, அணுகிய அளவில், கொடிய தீவினைகள் நம்மைத் துன்புறுத்த நெருங்கிவாரா.
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்புகலூர்
1.002
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குறி கலந்த இசை பாடலினான்,
Tune - நட்டபாடை
(திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
2.115
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெங் கள் விம்மு குழல்
Tune - செவ்வழி
(திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
4.016
திருநாவுக்கரசர்
தேவாரம்
செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி
Tune - இந்தளம்
(திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்குழலியம்மை)
4.054
திருநாவுக்கரசர்
தேவாரம்
பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,
Tune - திருநேரிசை:காந்தாரம்
(திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
4.105
திருநாவுக்கரசர்
தேவாரம்
தன்னைச் சரண் என்று தாள்
Tune - திருவிருத்தம்
(திருப்புகலூர் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
5.046
திருநாவுக்கரசர்
தேவாரம்
துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு
Tune - திருக்குறுந்தொகை
(திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
6.099
திருநாவுக்கரசர்
தேவாரம்
எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
Tune - திருத்தாண்டகம்
(திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
7.034
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
Tune - கொல்லி
(திருப்புகலூர் அக்கினியீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000