கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப் பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்; திசை திசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்; மான்மறி, மழுவும், வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்;-ஐயன் ஐயாறனாரே.
|
1
|
நம் தலைவனாராகிய ஐயாறனார் , சடையில் கங்கையையும் ஒளிவீசும் புள்ளிகளையுடைய பாம்பையும் பிறையையும் விளங்குமாறு வைத்துத் தம்மை எல்லாத் திசையிலுள்ளாரும் தொழுமாறு அமைத்துக்கொண்டு பார்வதி பாகராய் , மான்குட்டியையும் , மழுப்படையையும் , உள்ளங் கையில் வைத்த தீயையும் உடையவராவார் . | |
பொடிதனைப் பூச வைத்தார்; பொங்கு வெண் நூலும் வைத்தார்
கடியது ஓர் நாகம் வைத்தார்; காலனைக் கால் அவைத்தார்
வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகம் வைத்தார்
அடி இணை தொழவும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.
|
2
|
ஒளி விளங்கும் பூணூலை அணிந்து , கொடிய நாகத்தைப் பூண்டு , கூற்றுவனை உயிர்கக்குமாறு உதைத்து , அழகிய பார்வதியை ஒரு பாகமாக மார்பில் வைத்து ஐயாற்றுத் தலைவராம் பெருமான் அடியவர்கள் திருநீற்றைப்பூசித்தம் திருவடிகளைத் தொழுமாறு வைத்தவராவார் . | |
உடை தரு கீளும் வைத்தார்; உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படை தரு மழுவும் வைத்தார்; பாய் புலித்தோலும் வைத்தார்
விடை தரு கொடியும் வைத்தார்; வெண் புரி நூலும் வைத்தார்
அடை தர அருளும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.
|
3
|
கீளொடு கோவணம் அணிந்து , உலகங்களை நிலை நிறுத்தி , மழுப்படை ஏந்தி , பாய்கின்ற புலியின் தோலை உடுத்து , காளை எழுதிய கொடியை உயர்த்தி , வெண்புரிநூல் அணிந்து அடியார்கள் தம்மை அடைய அருள்புரிபவர் ஐயாறராகிய நம் தலைவராவார் . | |
தொண்டர்கள் தொழவும் வைத்தார்; தூ மதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்; எமக்கு என்றும் இன்பம் வைத்தார்
வண்டு சேர் குழலினாளை மருவி ஓர் பாகம் வைத்தார்
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே.
|
4
|
எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் வழிபடும் தலைவராகிய ஐயாறனார் , சடையில் தூய பிறையைச் சூடி , முடி மாலையை விளங்க வைத்து , வண்டுகள் சேர்ந்த கூந்தலையுடைய பார்வதி பாகராய் , அடியார்கள் தம்மைத் தொழவும் அடியவராகிய எங்களுக்கு என்றும் இன்பம் பெருகவும் வாய்ப்பு அளித்துள்ளார் . | |
வானவர் வணங்க வைத்தார்; வல்வினை மாய வைத்தார்
கான் இடை நடமும் வைத்தார்; காமனைக் கனலா வைத்தார்
ஆன் இடை ஐந்தும் வைத்தார்; ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
|
5
|
தலைவராகிய ஐயாறனார் வானவர் தம்மை வணங்கச் செய்தவராய் , அடியார்களுடைய கொடிய வினைகளை அழிய வைத்தவராய் , சுடுகாட்டிடைக் கூத்து நிகழ்த்துபவராய் , மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு செய்து , பசுவினிடைப் பஞ்ச கவ்வியத்தை அமைத்து அதனால் தம்மை அபிடேகிப்பவருக்கு அருள் செய்து , யானைத்தோலைப் போர்த்திக் கொண்டவராவார் . | |
| Go to top |
சங்கு அணி குழையும் வைத்தார்; சாம்பர் மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்; விரி பொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்; கடுவினை களைய வைத்தார்
அங்கம் அது ஓத வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
|
6
|
தலைவராகிய ஐயாறனார் சங்கினாலாகிய காதணியை அணிந்தவராய் , அடியவர்களும் திருநீறு அணிய வைத்தவராய் , சூரியனை வெயிலை வெளிப்படுத்துமாறு செய்தவராய் , எல்லா உலகங்களும் படைத்தவராய் , இரவையும் , பகலையும் தோற்றுவித்தவராய் , கொடிய வினைகளைப் போக்கும் வழிகளை உலகுக்கு அறிவித்தவராய் , வேதாங்கங்கள் ஆறினையும் ஓதி உணர வைத்தவராய் உள்ளார் . | |
பத்தர்கட்கு அருளும் வைத்தார்; பாய் விடை ஏற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்; சிவம் அதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்; முறை முறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்; -ஐயன் ஐயாறனாரே.
|
7
|
தலைவராகிய ஐயாறனார் பத்தர்களுக்கு அருள்பவராய் , காளையை ஏறியூர்பவராய் , அடியவர் மனத்தை ஒருவழிப்படுத்துபவராய் , அம்மனம் சிவனையே நினைக்குமாறு செய்பவராய் , அடியார்களுக்கு முத்தி நிலையை முழுதுமாக வைத்தவராய் , அந்நிலை எய்துதற்குரிய வழிகளை அமைத்தவராய் , யானைத்தோலைப் போர்வையாகக் கொண்டவராய் உள்ளார் . | |
ஏறு உகந்து ஏற வைத்தார்; இடை மருது இடமும் வைத்தார்
நாறு பூங்கொன்றை வைத்தார்; நாகமும் அரையில் வைத்தார்
கூறு உமை ஆகம் வைத்தார்; கொல் புலித் தோலும் வைத்தார்
ஆறும் ஓர் சடையில் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
|
8
|
தலைவராகிய ஐயாறனார் தாம் விரும்பி இவரக் காளை வாகனத்தை உடையவராய் , இருப்பிடமாக இடைமருதூரைக் கொண்டவராய் , நறுமணங்கமழும் கொன்றைப் பூவைச் சூடியவராய் , இடையில் பாம்பினை இறுகக்கட்டியவராய் , பார்வதிபாகராய் , கொல்லும் புலியின் தோலை ஆடையாக உடையவராய்க் கங்கையைச் சடையில் சூடியவராய் உள்ளார் . | |
பூதங்கள் பலவும் வைத்தார்; பொங்கு வெண்நீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்; கின்னரம் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்; பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.
|
9
|
தலைவராகிய ஐயாறனார் பல பூதகணங்களை உடையவராய் , ஒளிவீசும் வெண்ணீறு அணிந்தவராய் , இசைப்பாடல்களை அடியவர் பாட வைத்தவராய் , இசைக்குச் சிறப்பிடம் வழங்கியவராய் , தம் திருவடிகளை அடியவர்கள் முன் நின்று போற்றி வழிபடச் செய்பவராய் , தம்மையே ஆதியும் அந்தமுமாக வைத்தவ ராய் உள்ளார் . | |
இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
|
10
|
தலைவராகிய ஐயாறனார் , பிச்சை எடுப்பவருக்கு வழங்கும் உள்ளத்தை நன்மக்களுக்கு அருளியவராய் , அங்ஙனம் கொடுப்பவர்களுக்குத் தம் அருளை வழங்கியவராய் , நிறைய வைத்துக் கொண்டு இரப்பவர்களுக்கு வழங்காது மறைப்பவர்களுக்குக் கொடிய நரகத் துன்ப நுகர்ச்சியை வழங்குபவராய் , பரவிய நீரை உடைய கங்கையைப் பரந்த சடையின் ஒரு பகுதியில் வைத்தவராய் , இராவணனுக்கு அருள் செய்தவராய் விளங்குகின்றார் . | |
| Go to top |
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|