எத் தீப் புகினும் எமக்கு ஒரு தீது இலை;
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்;
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து
அத் தீ நிறத்தார்-அரநெறியாரே.
|
1
|
உலகம் அறிந்த தீயின் நிறத்தவராகிய அரநெறிப் பெருமானார் முத்தீக்களைப் போன்று , மூன்று இலைவடிவாக அமைந்த வேலினை ஏந்தித் தெத்தே என்ற பண் ஒன்றினை நுணுகிப் பாடிக் கொண்டு எம் உள்ளத்தில் கூத்து நிகழ்த்துகின்றார் . ஆதலின் எமக்கு எந்தத் தீயினிடைப் புக நேரினும் , அத்தீயினால் தீங்கு யாதும் நிகழாது . | |
வீரமும் பூண்பர்; விசயனொடு ஆயது ஒர்
தாரமும் பூண்பர்; தமக்கு அன்புபட்டவர்
பாரமும் பூண்பர்; நன் பைங் கண் மிளிர் அரவு-
ஆரமும் பூண்பர்-அரநெறியாரே.
|
2
|
அரநெறிப் பெருமான் நல்ல பசிய கண்கள் ஒளிவீசும் பாம்பினை மாலையாக அணிபவர் . தம்மிடம் அன்புடையவருடைய பொறுப்புக்களைத் தாமே ஏற்று அருளுபவர் . பார்வதியையும் உடன் அழைத்துச் சென்று அருச்சுனனோடு நிகழ்த்தப்பட்ட போரில் வீரச் செயல்களை நிகழ்த்துவர் . | |
தஞ்ச வண்ணத்தர்; சடையினர்; தாமும் ஒர்
வஞ்ச வண்ணத்தர்; வண்டு ஆர் குழலாளொடும்
துஞ்ச வண்ணத்தர்; துஞ்சாத கண்ணார் தொழும்
அஞ்ச வண்ணத்தர்-அரநெறியாரே.
|
3
|
அரநெறிப் பெருமானார் தம்மைத் தஞ்சம் என்று அடைந்தவருக்குத் தாம் அடைக்கலம் நல்கும் இயல்பினர் . சடை முடியை உடையவர் . அடியவர் அல்லாதாருக்கு வஞ்சனையான இயல்பினர் . வண்டுகள் பொருந்திய கூந்தலை உடைய பார்வதியோடும் பொருந்தும் இயல்பினர் . இமையாக் கண்களை உடைய மேலோர் தொழும் அம்சமந்திர ஜபயோகம் புரிபவர் . | |
விழித்தனர், காமனை வீழ்தர; விண் நின்று
இழித்தனர், கங்கையை; ஏத்தினர் பாவம்
கழித்தனர்; கல் சூழ் கடி அரண் மூன்றும்
அழித்தனர்-ஆரூர் அரநெறியாரே.
|
4
|
ஆரூர் அரநெறிப் பெருமானார் காமன் பொடியாய் விழுமாறு அவனை நெற்றிக் கண்ணால் நோக்கியவர் . வானத்திலிருந்து கங்கையைத் தம் சடையில் இறங்கச் செய்தவர் . தம்மை வழிபடுபவருடைய தீவினைகளைப் போக்குபவர் . கற்களால் சூழப்பட்ட காவல் பொருந்திய மும்மதில்களையும் அழித்தவர் . | |
துற்றவர், வெண் தலையில்; சுருள் கோவணம்
தற்றவர்; தம் வினை ஆன எலாம் அற
அற்றவர்; ஆரூர் அரநெறி கைதொழ
உற்றவர் தாம் ஒளி பெற்றனர் தாமே.
|
5
|
மண்டையோட்டில் பிச்சைவாங்கி உண்பவரும் , சுருண்ட கோவணத்தை இறுக்கிக் கட்டியவரும் , இயல்பாகவே வினையின் நீங்கியவருமாய் உள்ள எம்பெருமானாருடைய ஆரூர் அரநெறிக் கோயிலைத் தம் வினைகளாயின எல்லாம் நீங்குமாறு கையால் தொழும் வாய்ப்புப் பெற்றவர் , ஞான ஒளி பெற்றவராவர் . | |
| Go to top |
கூடு அரவத்தர்; குரல் கிண்கிணி அடி
நீடு அரவத்தர்; முன் மாலை இடை இருள்
பாடு அரவத்தர்; பணம் அஞ்சுபை விரித்து
ஆடு அரவத்தர் -அரநெறியாரே.
|
6
|
ஆரூர் அரநெறிப் பெருமானார் திருவடிகளிலே அரிபெய்சிலம்பினராய் ஒலிக்கும் , கிண்கிணியால் ஏற்படும் நீண்ட ஒலியினை உடையவராய் , மாலையின் முற்பட்ட பகுதியில் இருளிலே பாடும் ஒலியினராய் , படம் விரித்து ஆடும் பாம்பை அணிந்தவராய் உள்ளார் . | |
கூட வல்லார், குறிப்பில்(ல்), உமையாளொடும்;
பாட வல்லார்; பயின்று அந்தியும் சந்தியும்
ஆட வல்லார்; திரு ஆரூர் அரநெறி
நாட வல்லார்; வினை வீட வல்லாரே.
|
7
|
உமாதேவியின் குறிப்பறிந்து அவளோடு இணைந்திருத்தலில் வல்லவராய் , நண்பகல் அந்தியிலும் காலை மாலைச் சந்திகளிலும் பலகாலும் பாடவல்லவராய் , கூத்து நிகழ்த்துதலில் வல்லவராய் உள்ள பெருமானார் உறையும் திருவாரூர் அரநெறியை விரும்பித் தொழவல்லவர்கள் வினைகளைப் போக்கிக் கொள்ளும் ஆற்றலுடையவராவர் . | |
பாலை நகு பனி வெண்மதி, பைங் கொன்றை,
மாலையும் கண்ணியும் ஆவன; சேவடி
காலையும் மாலையும் கை தொழுவார் மனம்
ஆலயம்-ஆரூர் அரநெறியார்க்கே.
|
8
|
ஆரூர் அரநெறிப் பெருமானாருக்குப் பாலை ஒத்த வெண்ணிறமுடைய குளிர்ந்த பிறையும் பசிய கொன்றை மாலையும் முடிமாலைகள் ஆகும் . அவர் திருவடிகளைக் காலையும் மாலையும் கைதொழவல்ல அடியவர் உள்ளங்களே அவருக்கு உறைவிடமாகும் . | |
முடி வண்ணம் வான மின் வண்ணம்; தம் மார்பின்
பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம்;
படி வண்ணம் பாற்கடல் வண்ணம்; செஞ்ஞாயிறு
அடி வண்ணம்-ஆரூர் அரநெறியார்க்கே.
|
9
|
திருவாரூர் அரநெறியார்க்கு முடியின் நிறம் மேகத்தின் மின்னலின் நிறமாகும் . அவர் மார்பில் அணிந்த திருநீற்றின் நிறம் அவர் வாகனமான காளையின் நிறமாகும் . அவருடைய திரு மேனியின் நிறம் பாற்கடல் நிறமாகும் . அவர் திருவடியின் நிறம் சிவந்த காலை ஞாயிற்றின் நிறமாகும் . | |
பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல்
இன் அருள் சூடி எள் காதும் இராப்பகல்,
மன்னவர் கின்னரர் வானவர் தாம், தொழும்
அன்னவர்-ஆரூர் அரநெறியாரே.
|
10
|
ஆரூர் அரநெறியார் பொன்போன்ற சிவந்த முறுக்கேறிய சடையை உடையவர் . அவர் அவருடைய திருவடி நிழலிலே இனிய அருளைச் சூடி வழிபடுதலை வெறுக்காது இரவும் பகலும் அரசர்களும் கின்னரர் என்ற தேவகணத்தாரும் வானவர்களும் தொழும் அத்தன்மையை உடையவர் . | |
| Go to top |
பொருள் மன்னனைப் பற்றிப் புட்பகம் கொண்ட
மருள் மன்னனை எற்றி, வாள் உடன் ஈந்து,
கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட
அருள் மன்னர்-ஆரூர் அரநெறியாரே.
|
11
|
ஆரூர் அரநெறியார் , குபேரனைப் பிடித்து அவனிடமிருந்து புட்பக விமானத்தைக் கைப்பற்றிக்கொண்ட , உள்ள மயக்கம் கொண்ட அரசனாகிய இராவணனை முதலில் வருத்திப்பின் அவனுக்கு வாளும் உடனே அளித்து , கழுத்துக் கறுக்குமாறு கருமை பொருந்திய விடத்தை உண்ட அருள் வடிவான தலைவராவார் . | |
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
|
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
|
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
|
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
|
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
|
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
|
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
|
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
|