![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://sivaya.org/audio/1.124_alarmakaL_malithara.mp3 https://www.youtube.com/watch?v=fUl7MIiDDQg Add audio link
1.124
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருவீழிமிழலை - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் ராகத்தில் திருமுறை அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர்
மலர் மலி குழல் உமைதனை இடம் மகிழ்பவர்,
நலம் மலி உரு உடையவர், நகர் மிகு புகழ்
நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே.
1
மலர் நிறைந்த கூந்தலை உடைய உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டு மகிழ்பவரும் அழகிய திருமேனியை உடையவரும் ஆகிய சிவபிரானது நிலவுலகத்தே நிறைந்த புகழை உடைய மிழலை நகரை நினையவல்லவர் திருமகளின் கருணையால் செல்வம் நிறையப் பெற்று உலகில் வாழ்வர்.
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர்
கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில்
இருள் அறு மதியினர், இமையவர் தொழுது எழு
நிருபமன், மிழலையை நினைய வல்லவரே.
2
எண்ணற்ற உயிரினங்கள் வாழும் மண் முதலிய அனைத்துலகங்களிலும் இருளைப் போக்கும் மதி போல ஒளியும் தண்ணளியும் செய்பவரும் தேவர்களால் தொழப்பெறும் தன்னொப்பார் இல்லாதவரும் ஆகிய சிவபிரானது மிழலையை நினைப்பவர்கள் பரந்து விரிந்த இவ்வுலகில் அழகிய உருவோடு விளங்குபவர் ஆவர்.
கலைமகள் தலைமகன், இவன் என வருபவர்
அலை மலிதரு புனல், அரவொடு, நகுதலை,
இலை மலி இதழியும், இசைதரு சடையினர்
நிலை மலி மிழலையை நினைய வல்லவரே.
3
அலைகள் நிறைந்த கங்கை நதி பாம்பு தலை யோடு வில்வஇலை மிக்க கொன்றை ஆகியன பொருந்திய சடைமுடியினனாகிய சிவபிரான் உறையும் நிலைபேறு உடைய திருவீழிமிழலையை நினைய வல்லவர் கலைமகளின் தலைவன் இவன் என்னும் ஒவ்வொருவரும் சொல்லத்தக்க தகுதியை உடையவராய்க் கல்வி நலம் வாய்க்கப் பெறுவர்.
மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர்
காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே.
4
இடுகாட்டில் வாழும் பேய்கள் ஒலிக்க முழவு முதலிய கருவிகள் ஒலிக்க இசைபாடி நடம் நவில்பவனாகிய சிவபிரான் இனிதாக எழுந்தருளியதும் இவ்வுலகிடைப் பெருமையோடு நீண்டகாலமாக விளங்குவதுமாகிய திருவீழிமிழலையை நினைய வல்லவர்கள் அருகில் விரும்பி உறையும் சுற்றத்தினர் மகிழும் மனம் உடையவராவர்.
புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
இகழ்வு செய்தவன் உடை எழில் மறைவழி வளர்
முகம் அது சிதைதர முனிவு செய்தவன் மிகு
நிகழ்தரு மிழலையை நினைய வல்லவரே.
5
சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையை இகழ்ந்த தக்கனுடைய அழகிய வேதநெறிகளை ஓதி வளர்க்கும் தலையைச் சினந்து சிதைத்தருளியவனாகிய சிவபிரானது புகழ் பொருந்திய திருவீழிமிழலையை நினைய வல்லவர் புகழ்மகளைப் பொருந்துவர்.
Go to top
அன்றினர் அரி என வருபவர்-அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடியினில் எரி
சென்று கொள் வகை சிறு முறுவல்கொடு ஒளி பெற
நின்றவன் மிழலையை நினைய வல்லவரே.
6
தவம் செய்து அரிதாகப் பெற்ற ஒன்றுபட்ட முப் புரங்களைத் தேவர்கள் வேண்டுகோட்படி ஒருநொடிப் பொழுதில் எரி உண்ணுமாறு சிறுமுறுவல் செய்து புகழ்பெற்றவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையைநினைய வல்லவர் பகைவர்கட்குச் சிங்க ஏறு போன்ற வன்மை உடையவராவர்.
கரம் பயில் கொடையினர் கடிமலர் அயனது ஒர்
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர்,
வரம் பயில் கலைபல மறை முறை அறநெறி
நிரம்பினர், மிழலையை நினைய வல்லவரே.
7
மணங்கமழும் தாமரை மலர்மேல் உறையும் பிரமனுடைய தலைகளில் ஒன்றை அவனது உடலில் பொருந்தா வண்ணம் கொய்த சிவபிரான் உறையும் செழுமையான நகராய். மேன்மை மிக்க கலைகள் பலவற்றோடு வேதவிதிகளையும் அறநெறிகளையும் அறிந்தவர்கள் நிரம்பிய திருவீழிமிழலையை நினைய வல்லவர் தம் கைகளால் பலகாலும் கொடுக்கும் வள்ளன்மையோடு கூடிய உள்ளத்தைப் பெறுவர்.
ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர்
அரக்கன் நல்மணி முடி ஒருபதும் இருபது-
கரக்கனம் நெரிதர, மலர் அடிவிரல் கொடு
நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே.
8
இராவணனுடைய மணிமுடி தரித்த பத்துத் தலைகளும் இருபது கரங்களும் நெரியுமாறு தன்மலர் போன்ற திருவடியின் விரலைக் கொண்டு நெரித்தருளியவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை நினைய வல்லவர் ஒன்றுபட்ட உணர்வோடு ஒளி நெறியாகிய ஞானமார்க்கத்தில் செல்லுபவராவர்.
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயன் அரி கருத(அ)ரு வகை தழல்-
வடிவு உரு இயல் பினொடு உலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினைய வல்லவரே.
9
மணம் மிக்க தாமரை மலர்மேல் விளங்கும் பிரம னும் திருமாலும் நினைதற்கு அரியவகையில் தழல் வடிவோடு எல்லா உலகங்களிலும் நிறைந்தருளிய பெரியோனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை நினைய வல்லவர்கள் அடியவர் பலர் தம்மைச் சூழ இவ்வுலகில் இனிது வாழ்வர்.
மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர்
வன் மலர் துவர் உடையவர்களும், மதி இலர்
துன்மதி அமணர்கள், தொடர்வு அரு மிகு புகழ்
நின்மலன் மிழலையை நினைய வல்லவரே.
10
மருதத்தினது வலிய மலரால் துவர் ஏற்றிய காவி ஆடையை உடுத்த புத்தர்களும் அறிவற்றவர். சமணர்களும் துன்மதியாளர்கள். இவர்கள் இருவராலும் அறிதற்கு அரிய மிக்க புகழினை உடைய நின்மலனாகிய சிவபிரானின் மிழலையை நினைப்பவர்கள் மன்மதன் போன்ற அழகினைப் பெறுவார்கள்.
Go to top
நித்திலன் மிழலையை, நிகர் இலி புகலியுள்
வித்தகமறை மலி தமிழ்விரகன மொழி
பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு
கற்று வல்லவர் உலகினில் அடியவரே.
11
முத்துப் போன்றவனாகிய சிவபிரானது திருவீழி மிழலையை ஒப்பற்ற புகலிப்பதியில் வாழும் சதுரப்பாடுகளோடு வேதங்களிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் வல்லவன் ஆகிய ஞானசம்பந்தனது பத்தியால் விளைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பயின்று கற்று வல்லவர் உலகினில் சிறந்த அடியவராய் விளங்குவர்.
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவீழிமிழலை
1.004
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மைம் மரு பூங்குழல் கற்றை
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)
1.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சடை ஆர் புனல் உடையான்,
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.020
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தட நிலவிய மலை நிறுவி,
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.035
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரை ஆர் விரி கோவண
Tune - தக்கராகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.082
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இரும் பொன்மலை வில்லா, எரி
Tune - குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.092
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
Tune - குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.124
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.132
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.009
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சீர் மருவு தேசினொடு தேசம்
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.085
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மட்டு ஒளி விரிதரு மலர்
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.098
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண்மதி தவழ் மதில் மிழலை
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.111
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை
Tune - பழம்பஞ்சுரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.116
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், துன்று கொன்றை நம் சடையதே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.119
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
Tune - புறநீர்மை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.064
திருநாவுக்கரசர்
தேவாரம்
பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;
Tune - திருநேரிசை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.095
திருநாவுக்கரசர்
தேவாரம்
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
Tune - திருவிருத்தம்
(திருவீழிமிழலை தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
5.012
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
5.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
என் பொனே! இமையோர் தொழு
Tune - திருக்குறுந்தொகை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.050
திருநாவுக்கரசர்
தேவாரம்
போர் ஆனை ஈர் உரிவைப்
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.051
திருநாவுக்கரசர்
தேவாரம்
கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் அவன் காண்; கண்
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
மான் ஏறு கரம் உடைய
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
7.088
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்
Tune - சீகாமரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை)
9.005
சேந்தனார்
திருவிசைப்பா
சேந்தனார் - திருவீழிமிழலை
Tune -
(திருவீழிமிழலை )