பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா! காவாய்! என நின்று ஏத்தும் காழியார், மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம் பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே.
|
1
|
பாடல்களின் சொற்பொருளாய்க் கலந்து நிற்கும் பரமர் பக்தர்கள் `கொன்றைப் பூக்கள் பொருந்திய முறுக்கேறிய செஞ்சடை ஈசா காவாய்!` என நின்று துதித்துப் போற்றும் சீகாழிப்பதியினராவார். மனம் ஒன்றாத அசுரர்களின் மூன்று புரங்களை அழித்தவரும் அவரேயாவார். | |
எந்தை! என்று, அங்கு இமையோர் புகுந்து ஈண்டி, கந்தமாலை கொடு சேர் காழியார், வெந்த நீற்றர், விமலர் அவர் போல் ஆம் அந்தி நட்டம் ஆடும் அடிகளே.
|
2
|
அந்திக் காலத்தில் நடனம் ஆடும் அடிகளாகிய இறைவர் தேவர்கள் எந்தையே என அன்போடு அழைத்து ஆலயத்துட்புகுந்து குழுமி மணம்மிக்க மாலைகளை அணிவித்தற் பொருட்டுச் சேரும் சீகாழிப் பதியினராவார். அவரே நன்றாகச் சுட்டு எடுத்த திருநீற்றை அணிந்தவரும் குற்றம் அற்றவருமாவார். | |
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம், கானமான் கைக் கொண்ட காழியார், வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம் ஆன இன்பம் ஆடும் அடிகளே.
|
3
|
முற்றிய இன்பத்தோடு ஆடுகின்ற சிவபிரான் இனிப்பில் தேனை வென்று விளங்கும் மொழிகளைப் பேசுகின்ற உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காட்டில் திரியும் இயல்பினதாகிய மானைக் கையின்கண் ஏந்தி விளங்கும் காழிப்பதியினராவார். அவர் வானளாவ உயர்ந்த திருக்கோயிலில் விளங்குபவர் ஆவார். | |
மாணா வென்றிக் காலன் மடியவே காணா மாணிக்கு அளித்த காழியார், நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம் பேணார் புரங்கள் அட்ட பெருமானே.
|
4
|
தம்மைப் பேணி வழிபடாத அசுரர்களின் முப் புரங்களை அழித்த பெருமான் மாட்சிமையில்லாத வெற்றியை உடைய காலனை மடியுமாறு செய்து தம்மையன்றி வேறொன்றையும் காணாத மார்க்கண்டேய முனிவருக்கு என்றும் பதினாறாண்டோடு விளங்கும் வரத்தை அளித்தருளிய காழிப்பதியினர் ஆவார். முப்புரங்களை அழித்தற்பொருட்டு நாணிற் பூட்டிய அம்பைத் தொடுத்த வருமாவார். | |
மாடே ஓதம் எறிய, வயல் செந்நெல் காடு ஏறிச் சங்கு ஈனும் காழியார், வாடா மலராள் பங்கர் அவர்போல் ஆம் ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே.
|
5
|
குற்றம் பொருந்திய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தருளிய இறைவர் அருகில் கடல் நீரின் அலைகள் எறிந்த சங்குகள் வயல்களில் விளைந்த செந்நெற் பயிர்களின் செறிவில் ஏறி முத்துக்களை ஈனும் சீகாழிப் பதியினர். அவர் வாடாமலர்களைச் சூடி விளங்கும் பார்வதி தேவியைத்தம் திருமேனியின் ஒரு பங்காக உடையவராவார். | |
| Go to top |
கொங்கு செருந்தி கொன்றைமலர் கூடக் கங்கை புனைந்த சடையார், காழியார், அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம் செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே.
|
6
|
சிவந்த கண்களை உடைய அரக்கர் மூவரின் திரி புரங்களை எரித்தவராகிய இறைவர் கோங்கு செருந்தி கொன்றை மலர் இவற்றுடன் கங்கையை அணிந்துள்ள சடைமுடியினர். அக்காழியர் தாம் அணிந்துள்ள பாம்புகளை அவ்விடத்தே தங்கி ஆட்டுபவராகவும் உள்ளார். | |
கொல்லை விடைமுன் பூதம் குனித்து ஆடும் கல்லவடத்தை உகப்பார் காழியார், அல்ல இடத்தும் நடந்தார் அவர்போல் ஆம் பல்ல இடத்தும் பயிலும் பரமரே.
|
7
|
எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்கும் பரமராகிய பெருமானார் முல்லை நிலத்துக்குரிய ஆன் ஏற்றை ஊர்ந்து அதன் முன்னே பூதகணங்கள் வளைந்து நெளிந்து ஆடிச்செல்லக் கல்லவடம் என்னும் பறையை விரும்புபவர். அக்காழியார் தம்மை அறிந்து போற்றுநர் அல்லாதார் இடங்களிலும் தோன்றி அருள் வழங்கும் இயல்பினர். | |
எடுத்த அரக்கன் நெரிய, விரல் ஊன்றி, கடுத்து, முரிய அடர்த்தார், காழியார்; எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம் பொடிக் கொள் நீறு பூசும் புனிதரே.
|
8
|
பொடியாக அமைந்த திருநீற்றைப் பூசும் தூயவராகிய பெருமானார் கயிலைமலையை எடுத்த இராவணனின் முடிகள் நெரியுமாறு தம் கால்விரலை ஊன்றிச்சினந்து அவனது ஆற்றல் அழியுமாறு அடர்த்தவர். அக்காழியார் இராவணன் எடுத்த பாடலாகிய சாமகானத்துக்கு இரங்கி அருள் செய்தவராவார். | |
ஆற்றல் உடைய அரியும் பிரமனும் தோற்றம் காணா வென்றிக் காழியார், ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம் கூற்றம் மறுகக் குமைத்த குழகரே.
|
9
|
வாழ்நாளைக் கூறுபடுத்திக் கணக்கிட்டு உயிர் கொள்ளும் இயமன் அஞ்சுமாறு அவனை உதைத்து மார்க்கண்டேயர்க்கு அருள்செய்த குழகராகிய சிவபிரானார் ஆற்றல் உடைய திருமாலும் பிரமனும் தம் அடிமுடிகள் தோன்றுமிடங்களைக் காணாதவாறு வானுற ஓங்கிய வெற்றியை உடையவராய்க் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளார். அவர் மிக உயர்ந்த ஆன்ஏற்றில் ஏறி உலாவந்து அருள்பவராவார். | |
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர் கரக்கும் உரையை விட்டார், காழியார், இருக்கின் மலிந்த இறைவர் அவர்போல் ஆம் அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே.
|
10
|
தாமரை அரும்பு போன்ற தனபாரங்களை உடைய உமையம்மையை ஒருபங்காகக் கொண்டுள்ள தலைவராகிய சிவபிரான் உண்மையின்றி மிகப்பிதற்றுகின்ற சமணர் சாக்கியர்களின் வஞ்சக உரைகளைக் கொள்ளாதவராய்க் காழியில் எழுந்தருளியுள்ளார். அவரே இருக்கு வேதத்தில் நிறைந்துள்ள இறைவரும் ஆவார். | |
| Go to top |
கார் ஆர் வயல் சூழ் காழிக் கோன்தனைச் சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன பாரார் புகழப் பரவ வல்லவர் ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே.
|
11
|
நீர்வளத்தால் கருஞ்சேறுபட்டு விளங்கும் வயல்களால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் விளங்கும் கோமகனாகிய சிவபிரான்மீது சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் அருளிச்செய்த பாடல்களை ஓதி உலகோர் போற்றத் துதிக்க வல்லவர் அழகிய வானகத்தில் இனிதாக இருப்பர். | |
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத்தாளச்சதி பதிகம், பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|