ஆதியன் ஆதிரையன் அயன் மாலறி தற்கரிய சோதியன் சொற்பொருளாய்ச் சுருங் காமறை நான்கினையும் ஓதியன் உம்பர்தங்கோன் உல கத்தினுள் எவ்வுயிர்க்கும் நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே
|
1
|
உறவிலி ஊனமிலி உண ரார்புரம் மூன்றெரியச் செறுவிலி தன்னினைவார் வினை யாயின தேய்ந்தழிய அறவில கும்மருளான் மரு ளார்பொழில் வண்டறையும் நறவிரி கொன்றையினான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே
|
2
|
வானுடை யான்பெரியான் மனத் தாலும் நினைப்பரியான் ஆனிடை ஐந்தமர்ந்தான் அணு வாகியொர் தீயுருக்கொண் டூனுடை இவ்வுடலம் ஒடுங் கிப்புகுந் தான்பரந்தான் நானுடை மாடெம்பிரான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே
|
3
|
ஓடுடை யன்கலனா உடை கோவண வன்னுமையோர் பாடுடை யன்பலிதேர்ந் துணும் பண்புடை யன்பயிலக் காடுடை யன்னிடமா மலை ஏழுங் கருங்கடல்சூழ் நாடுடை நம்பெருமான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே
|
4
|
பண்ணற் கரியதொரு படை ஆழி தனைப் படைத்துக் கண்ணற் கருள்புரிந்தான் கரு தாதவர் வேள்விஅவி உண்ணற் கிமையவரை உருண் டோட உதைத்துகந்து நண்ணற் கரியபிரான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே
|
5
|
| Go to top |
மல்கிய செஞ்சடைமேல் மதி யும்மர வும்முடனே புல்கிய ஆரணன்எம் புனி தன்புரி நூல்விகிர்தன் மெல்கிய விற்றொழிலான் விருப் பன்பெரும் பார்த்தனுக்கு நல்கிய நம்பெருமான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே
|
6
|
அங்கமொ ராறவையும் அரு மாமறை வேள்விகளும் எங்கும் இருந்தந்தணர் எரி மூன்றவை யோம்புமிடம் பங்கய மாமுகத்தாள் உமை பங்கன் உறைகோயில் செங்கயல் பாயும்வயல் திரு வூர்நனி பள்ளியதே
|
7
|
திங்கட் குறுந்தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய் நங்கட் பிணிகளைவான் அரு மாமருந் தேழ்பிறப்பும் மங்கத் திருவிரலால் அடர்த் தான்வல் அரக்கனையும் நங்கட் கருளும்பிரான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே
|
8
|
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்டுகந்து வான மதிள்அரணம் மலை யேசிலை யாவளைத்தான் ஊனமில் காழிதன்னுள் ளுயர் ஞானசம் பந்தர்க்கன்று ஞானம் அருள்புரிந்தான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே
|
9
|
காலமும் நாள்கழியுந் நனி பள்ளி மனத்தின்உள்கிக் கோலம தாயவனைக் குளிர் நாவல ஊரன்சொன்ன மாலை மதித்துரைப்பார் மண் மறந்துவா னோர்உலகில் சாலநல் லின்பமெய்தித் தவ லோகத் திருப்பவரே
|
10
|
| Go to top |