![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
கரப்பர் கால மடைந்தவர் தம்வினை மூடி னார்களி யானையின் ஈருரி பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர் முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர் போது தாதொடு கொண்டு புனைந்துடன் நல்ல நான்மறை யோதிய நம்பனைப் நெருப்பி னாற்குவித் தாலொக்கு நீள்சடைப் எட்ட விட்ட விடுமண லெக்கர்மேல் நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை தொண்டு பாடியுந் தூமலர் தூவியும் அரக்க னாற்ற லழித்த அழகனைப்
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=YohZYGl7318 Add audio link
5.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருப்பராய்துறை - திருக்குறுந்தொகை அருள்தரு பசும்பொன்மயிலம்மை உடனுறை அருள்மிகு திருப்பராய்த்துறைநாதர் திருவடிகள் போற்றி
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.
1
பாடி னார்மறை நான்கினோ டாறங்கம்
சேட னார்தென்ப ராய்த்துறைச் செல்வரைத்
தேடிக் கொண்டடி யேன்சென்று காண்பனே.
2
நட்ட மாடுவர் நள்ளிரு ளேமமும்
சிட்ட னார்தென்ப ராய்த்துறைச் செல்வனார்
இட்ட மாயிருப் பாரை யறிவரே.
3
என்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர்
தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
அன்ப ராயிருப் பாரை யறிவரே.
4
தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச்
சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே.
5
Go to top
பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனைத்
தில்லை யான்தென் பராய்த்துறைச் செல்வனை
வல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே.
6
பருப்ப தம்மத யானை யுரித்தவன்
திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல்
பொருப்ப ராவி யிழிபுனல் போன்றதே.
7
பட்ட நுண்துளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல்
விட்டு நம்வினை யுள்ளன வீடுமே.
8
மருப்ப ராய்வளைந் தாலொக்கும் வாண்மதி
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்ப ராயிருப் பாரை யறிவரே.
9
இண்டை கட்டி யிணையடி யேத்தியும்
பண்ட ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே.
10
Go to top
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை யேத்துமின்
பொருக்க நும்வினை போயறுங் காண்மினே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்பராய்துறை
1.135
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீறு சேர்வது ஒர் மேனியர்,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)
5.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
Tune - திருக்குறுந்தொகை
(திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)
This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000