![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க பண்டனை வென்ற வின்சொற் பாவையோர் பங்க நீல உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம் பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீறா பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக் இரவியு மதியும் விண்ணு மிருநிலம் புனலுங் காற்றும் பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை யீந்தாய் பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடு வானே இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த வெம்மான்
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=fkS7G-zK1CU Add audio link
4.063
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவண்ணாமலை - திருநேரிசை அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி
சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே
ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே
நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே.
1
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே யமரர் கோவே யணியணா மலை யுளானே
தொண்டனே னுன்னை யல்லாற் சொல்லுமா சொல்லி லேனே.
2
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே.
3
செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழு மணியணா மலையு ளானே
என்பொனே யுன்னை யல்லா லேதுநா னினைவி லேனே.
4
மறைவலா விறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா
அறைகழ லமர ரேத்து மணியணா மலையு ளானே
இறைவனே யுன்னை யல்லால் யாதுநா னினைவி லேனே.
5
Go to top
கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலா
அரிகுல மலிந்தவண்ணா மலையுளா யலரின்மிக்க
வரிமிகு வண்டுபண்செய் பாதநான் மறப்பிலேனே.
6
உரகமார் பவன மெட்டுந் திசையொளி யுருவ மானாய்
அரவுமிழ் மணிகொள்சோதி யணியணா மலையுளானே
பரவுநின் பாதமல்லாற் பரமநான் பற்றிலேனே.
7
நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந் தீண்டு கொண்ட லணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத் திறமலாற் றிறமி லேனே.
8
மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையு ணின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூக மணியணா மலையு ளானே
வாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே.
9
உரத்தினால் வரையை யூக்க வொருவிர னுதியி னாலே
அரக்கனை நெரித்த வண்ணா மலையுளா யமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவண்ணாமலை
1.010
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய
Tune - நட்டபாடை
(திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
1.069
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூ ஆர் மலர் கொண்டு
Tune - தக்கேசி
(திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
4.063
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்
Tune - திருநேரிசை
(திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
5.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,
Tune - திருக்குறுந்தொகை
(திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
5.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டி ஏறு உகந்து ஏறி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
8.107
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்
Tune - புறநீர்மை
(திருவண்ணாமலை )
8.108
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(திருவண்ணாமலை )
This page was last modified on Thu, 13 Aug 2026 07:11:09 +0000