![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கி கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா கல்லினாற் புரமூன் றெய்த கடவுளைக் காத லாலே கறையராய்க் கண்ட நெற்றிக் கண்ணராய்ப் பெண்ணோர் பாகம் பொந்தையைப் பொருளா வெண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன் கொந்தார்பூங் குழலி னாரைக் கூறியே காலம் போன அங்கதி ரோன வனை யண்ணலாக் கருத வேண்டா ஓதியே கழிக்கின் றீர்க ளுலகத்தீ ரொருவன் றன்னை மற்றுநீர் மனம்வை யாதே மறுமையைக் கழிக்க வேண்டில்
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=Aa6ZjiSja28 Add audio link
4.041
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருச்சோற்றுத்துறை - திருநேரிசை:கொல்லி அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி
மெய்விரா மனத்த னல்லேன் வேதியா வேத நாவா
ஐவரா லலைக்கப் பட்ட வாக்கைகொண் டயர்த்துப் போனேன்
செய்வரா லுகளுஞ் செம்மைத் திருச்சோற்றுத் துறைய னாரே.
1
எட்டவாங் கைகள் வீசி யெல்லிநின் றாடு வானை
அட்டகா மலர்கள் கொண்டே யானஞ்சு மாட்ட வாடிச்
சிட்டரா யருள்கள் செய்வார் திருச்சோற்றுத் துறைய னாரே.
2
எல்லியும் பகலு முள்ளே யேகாந்த மாக வேத்தும்
பல்லில்வெண் டலைகை யேந்திப் பல்லிலந் திரியுஞ் செல்வர்
சொல்லுநன் பொருளு மாவார் திருச்சோற்றுத் துறைய னாரே.
3
இறையரா யினிய ராகித் தனியராய்ப் பனிவெண் டிங்கட்
பிறையராய்ச் செய்த வெல்லாம் பீடராய்க் கேடில் சோற்றுத்
துறையராய்ப் புகுந்தென் னுள்ளச் சோர்வுகண் டருளி னாரே.
4
எந்தையே யேக மூர்த்தி யென்றுநின் றேத்த மாட்டேன்
பந்தமாய் வீடு மாகிப் பரம்பர மாகி நின்று
சிந்தையுட் டேறல் போலுந் திருச்சோற்றுத் துறைய னாரே.
5
Go to top
பார்த்தனுக் கருள்கள் செய்த பாசுப தன்றி றமே
ஆர்த்துவந் திழிவ தொத்த வலைபுனற் கங்கை யேற்றுத்
தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத் துறைய னாரே.
6
எந்தையெம் பிரானாய் நின்ற விறைவனை யேத்தா தந்தோ
முந்தரா வல்கு லாளை யுடன்வைத்த வாதி மூர்த்தி
செந்தாது புடைகள் சூழ்ந்த திருச்சோற்றுத் துறைய னாரே.
7
வெங்கதி ரோன்வ ழியே போவதற் கமைந்து கொண்மின்
அங்கதி ரோன வனை யுடன்வைத்த வாதி மூர்த்தி
செங்கதி ரோன்வ ணங்குந் திருச்சோற்றுத் துறைய னாரே.
8
நீதியா னினைய மாட்டீர் நின்மல னென்று சொல்லீர்
சாதியா நான்மு கனுஞ் சக்கரத் தானுங் காணாச்
சோதியாய்ச் சுடர தானார் திருச்சோற்றுத் துறைய னாரே.
9
பெற்றதோ ருபாயந் தன்னாற் பிரானையே பிதற்று மின்கள்
கற்றுவந் தரக்க னோடிக் கயிலாய மலையெ டுக்கச்
செற்றுகந் தருளிச் செய்தார் திருச்சோற்றுத் துறைய னாரே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருச்சோற்றுத்துறை
1.028
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செப்பம் நெஞ்சே, நெறி கொள்!
Tune - தக்கராகம்
(திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகையம்மை)
4.041
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய் விராம் மேனி தன்னைப்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
4.085
திருநாவுக்கரசர்
தேவாரம்
காலை எழுந்து, கடிமலர் தூயன
Tune - திருவிருத்தம்
(திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
5.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
Tune - நாட்டைக்குறிஞ்சி
(திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
6.044
திருநாவுக்கரசர்
தேவாரம்
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால்
Tune - திருத்தாண்டகம்
(திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
7.094
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
Tune - கௌசிகம்
(திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000