உரையினில் வந்தபாவ முணர்நோய்களும்ம செயறீங்கு குற்ற முலகில்
வரையினி லாமைசெய்த வவைதீரும் வண்ண மிகவேத்தி நித்த நினைமின்
வரைசிலை யாகவன்று மதின்மூன் றெரித்து வளர்கங்குல் நங்கை வெருவத்
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே. |
1
|
ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற பிணிநோ யொருங்கு முயரும்
வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி விதியான வேத விகிர்தன்
கானிடை யாடிபூதப் படையா னியங்கு விடையா னிலங்கு முடிமேல்
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு திருநாரை யூர்கை தொழவே. |
2
|
ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன் றுயருற்ற தீங்கு விரவிப்
பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை யொழிவுற்ற வண்ண மகலும்
போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று புகழ்வானு ளோர்கள் புணரும்
தேரிடை நின்றவெந்தை பெருமா னிருந்த திருநாரை யூர்கை தொழவே. |
3
|
தீயுற வாயவாக்கை யதுபற்றி வாழும் வினைசெற்ற வுற்ற வுலகின்
தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம் நிலையாக நின்று மருவும்
பேயுற வாயகானில் நடமாடி கோல விடமுண்ட கண்டன் முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே. |
4
|
வசையப ராதமாய வுவரோதம் நீங்குந் தவமாய தன்மை வரும்வான்
மிசையவ ராதியாய திருமார் பிலங்கு விரிநூலர் விண்ணு நிலனும்
இசையவ ராசிசொல்ல விமையோர்க ளேத்தி யமையாத காத லொடுசேர்
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே. |
5
|
| Go to top |
உறைவள ரூனிலாய வுயிர்நிற்கும் வண்ணம் உணர்வாக்கும் உண்மை யுலகில்
குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில் நிறைவாற்று நேசம் வளரும்
மறைவளர் நாவன்மாவி னுரிபோர்த்த மெய்யன் அரவார்த்த வண்ணல் கழலே
திறைவளர் தேவர்தொண்டி னருள்பேண நின்ற திருநாரை யூர்கை தொழவே. |
6
|
தனம்வரு நன்மையாகுந் தகுதிக் குழந்து வருதிக் குழன்ற வுடலின்
இனம்வள ரைவர்செய்யும் வினயங்கள் செற்று நினைவொன்று சிந்தை பெருகும்
முனமொரு காலமூன்று புரம்வெந்து மங்கச் சரமுன் றெரிந்த அவுணர்
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே. |
7
|
உருவரை கின்றநாளி லுயிர்கொள்ளுங் கூற்ற நனியஞ்சு மாத லுறநீர்
மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின் இழிபா டிலாத கடலின்
அருவரை சூழிலங்கை யரையன்றன் வீரம் மழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே. |
8
|
வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க பகைதீர்க்கு மேய வுடலில் தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து திகழும்
சேறுயர் பூவின்மேய பெருமானும் மற்றைத் திருமாலு நேட எரியாய்ச்
சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே. |
9
|
மிடைபடு துன்பமின்ப முளதாக்கு முள்ளம் வெளியாக்கு முன்னி யுணரும்
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ண மொலிபாடி யாடி பெருமை
உடையினை விட்டுளோரு முடல்போர்த்து ளோரும் உரைமாயும் வண்ண மழியச்
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே. |
10
|
| Go to top |
எரியொரு வண்ணமாய வுருவானை யெந்தை பெருமானை யுள்கி நினையார்
திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன் உரைமாலை பத்து மொழிவார்
திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க துளதென்பர் செம்மை யினரே. |
11
|