சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.076   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஅகத்தியான்பள்ளி - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு மங்கைநாயகியம்மை உடனுறை அருள்மிகு அகத்தீசுவரர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=eQLOfeO_N6k   Add audio link Add Audio

வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய வெம்பெரு மானகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையி னார்கட்கில்லை யாம்பாவமே.

1

துன்னங்கொண்ட வுடையான் றுதைந்தவெண் ணீற்றினான்
மன்னுங்கொன்றை மதமத்தஞ் சூடினான் மாநகர்
அன்னந்தங்கு பொழில்சூழ் அகத்தியான் பள்ளியை
உன்னஞ்செய்தமனத்தார்கள் தம் வினையோடுமே.

2

உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந் துண்பதுங்
கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்
அடுத்ததுவும்பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
றொடுத்தது வுஞ்சர முப்புரந் துகளாகவே.

3

காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால்
பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே.

4

போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை
கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக்
கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே.

5
Go to top

தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன்
எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை
அரிந்ததுவும்பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
புரிந்ததுவும் உமையாளொர் பாகம் புனைதலே.

6

ஓதியெல்லாம் உலகுக்கொர் ஒண்பொரு ளாகிமெய்ச்
சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்
ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை
நீதியாற் றொழுவார் அவர்வினை நீங்குமே.

7

செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத் திருந்தார்புரம்
ஒறுத்ததுவும் மொளிமா மலருறை வான்சிரம்
அறுத்ததுவும்பொழில்சூழ் அகத்தி யான்பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே.

8

சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும்
அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப்
பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே.

9

செந்துவ ராடையினாரும் வெற்றரை யேதிரி
புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள்பிரான் அகத்தியான் பள்ளியைச்
சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே.

10
Go to top

ஞாலம் மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்
ஆலுஞ்சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள்
சூல நல்லபடையான் அடிதொழு தேத்திய
மாலைவல்லா ரவர்தங்கண் மேல்வினை மாயுமே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஅகத்தியான்பள்ளி
2.076   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாடிய வெண்தலை மாலை சூடி,
Tune - காந்தாரம்   (திருஅகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் மங்கைநாயகியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org