![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை மண்ணொடுநீ ரனல்காலோ டாகாய மதியிரவி விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின் வேலைமலி தண்கானல் வெண்காட்டான் றிருவடிக்கீழ் தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன் சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் பண்மொய்த்த வின்மொழியாள் பயமெய்த மலையெடுத்த கள்ளார்செங் கமலத்தான் கடற்கிடந்தா னெனவிவர்கள் போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும் தண்பொழில்சூழ் சண்பையர்கோன் றமிழ்ஞான சம்பந்தன்
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=BIiW3xaWvB0 Add audio link
2.048
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருவெண்காடு - சீகாமரம் தீரசங்கராபரணம் நாதநாமக்கிரியை கஜகௌரி ராகத்தில் திருமுறை அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி
மக்கட் செல்வம் வாய்க்க, வாதத்திறமை, எழுத்தாற்றல், தத்துவஞானத் தெளிவைப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்
பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
1
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.
2
எண்ணில்வரு மியமான னிகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.
3
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.
4
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன் றூதர்
ஆலமிடற் றானடியா ரென்றடர வஞ்சுவரே.
5
Go to top
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தா னுறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.
6
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே.
7
உன்மத்த னுரநெரித்தன் றருள்செய்தா னுறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடன் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.
8
ஒள்ளாண்மை கொளற்கோடி யுயர்ந்தாழ்ந்து முணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யு மேதகுவெண் காட்டானென்
றுள்ளாடி யுருகாதா ருணர்வுடைமை யுணரோமே.
9
பேதையர்க ளவர்பிறிமின் அறிவுடையீ ரிதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.
10
Go to top
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவெண்காடு
2.048
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் காட்டும் நுதலானும், கனல்
Tune - சீகாமரம்
(திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
2.061
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!
Tune - காந்தாரம்
(திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
3.015
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன், வழிபட
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
5.049
திருநாவுக்கரசர்
தேவாரம்
பண் காட்டிப் படிஆய தன்
Tune - திருக்குறுந்தொகை
(திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
6.035
திருநாவுக்கரசர்
தேவாரம்
தூண்டு சுடர் மேனித் தூநீறு
Tune - திருத்தாண்டகம்
(திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
7.006
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படம் கொள் நாகம் சென்னி
Tune - இந்தளம்
(திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
This page was last modified on Thu, 13 Aug 2026 07:11:09 +0000