![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
துஞ்சவருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய் கேடும்பிறவியு மாக்கினாருங் கேடிலா கந்தங்கமழ்கொன்றைக் கண்ணிசூடிக் கனலாடி பாலமதிசென்னி படரச்சூடி பழியோராக் ஈர்க்கும்புனல்சூடி யிளவெண்திங்கள் முதிரவே பறையுஞ்சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே நுணங்குமறைபாடி யாடிவேடம் பயின்றாரும் கணையும்வரிசிலையு மெரியுங்கூடிக் கவர்ந்துண்ண கவிழமலைதரளக் கடகக்கையா லெடுத்தான்தோள் பகலுமிரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா போழம்பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும் சாந்தங்கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன்
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=AweGz-Ek-Iw Add audio link
1.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருவாலங்காடு (பழையனூர்) - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி ராகத்தில் திருமுறை அருள்தரு வண்டார்குழலியம்மை உடனுறை அருள்மிகு ஊர்த்ததாண்டவேசுரர் திருவடிகள் போற்றி
திருவோத்தூரிலிருந்து புறப்பட்டு ஞானசம்பந்தர் திருமாகறல் குரங்கணில் முட்டம் ஆகிய தலங்களை வணங்கிக் காஞ்சிபுரம் சென்றடைந்தார். கச்சி ஏகம்பம் , காம கோட்டம் ஆகிய ஆலயங்களை வணங்கிக் கொண்டு அத்தலத்தின் அருகில் விளங்கும், ஆலயங் களைப் போற்றிக் காரைக்காலம்மையார் முத்திப் பேறு பெற்றருளிய திருவாலங்காட்டை வணங்கிப் போற்ற எண்ணினார். அம்மையார் தலையால் நடந்து வந்த அத்தலத்தை மிதித்தற்கு அஞ்சி அத்தலத்தின் அருகில் உள்ளதொரு ஊரில் அன்றிரவு துயில் கொண்டார். ஆலங் காட்டு இறைவர் அவர் கனவில் தோன்றி நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ என்ன உடனெழுந்து துஞ்சவருவாரும் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
நெஞ்சம்புகுந்தென்னை நினைவிப்பாரு முனைநட்பாய்
வஞ்சப்படுத்தொருத்தி வாணாள்கொள்ளும் வகைகேட்
டஞ்சும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.
1
வீடுமாநெறி விளம்பினாரெம் விகிர்தனார்
காடுஞ்சுடலையுங் கைக்கொண்டெல்லிக் கணப்பேயோ
டாடும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.
2
வெந்தபொடிநீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார்
கொந்தண்பொழிற்சோலை யரவிற்றோன்றிக் கோடல்பூத்
தந்தண்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.
3
காலனுயிர்செற்ற காலனாய கருத்தனார்
கோலம்பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை
ஆலும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.
4
பார்க்குமரவம்பூண் டாடிவேடம் பயின்றாரும்
கார்க்கொள்கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த்
தார்க்கும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.
5
Go to top
மறையும்பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
பிறையும்பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
டறையும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.
6
இணங்குமலைமகளோ டிருகூறொன்றா யிசைந்தாரும்
வணங்குஞ்சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கேட்
டணங்கும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.
7
இணையிலெயின்மூன்று மெரித்திட்டாரெம் மிறைவனார்
பிணையுஞ்சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர்ந்
தணையும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.
8
பவழநுனைவிரலாற் பையவூன்றிப் பரிந்தாரும்
தவழுங்கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூத்
தவிழும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.
9
திகலுமிருவர்க்கு மெரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும்வழிபாடு வல்லார்க்கென்றுந் தீயபோய்
அகலும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.
10
Go to top
வேழம்வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும்
கேழல்வினைபோகக் கேட்பிப்பாருங் கேடிலா
ஆழ்வர்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.
11
ஆந்தண்பழையனூ ராலங்காட்டெம் மடிகளை
வேந்தனருளாலே விரித்தபாட லிவைவல்லார்
சேர்ந்தவிடமெல்லாந் தீர்த்தமாகச் சேர்வாரே.
12
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவாலங்காடு (பழையனூர்)
1.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்
Tune - தக்கராகம்
(திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுரர் வண்டார்குழலியம்மை)
4.068
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெள்ள நீர்ச் சடையர் போலும்;
Tune - திருநேரிசை
(திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
6.078
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார்
Tune - திருத்தாண்டகம்
(திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
7.052
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
முத்தா! முத்தி தர வல்ல
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்துவதாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
11.002
காரைக்கால் அம்மையார்
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்
Tune -
(திருவாலங்காடு (பழையனூர்) )
This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000