சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை thalam திருக்கொள்ளம்பூதூர்
3.006   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய
பண் - காந்தாரபஞ்சமம்   (திருக்கொள்ளம்பூதூர் வில்வவனேசுவரர் சவுந்தராம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Fu2dZdfFYQw

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.006   கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருக்கொள்ளம்பூதூர் ; (திருத்தலம் அருள்தரு சவுந்தராம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வில்வவனேசுவரர் திருவடிகள் போற்றி )
கொள்ளம்பூதூர் எல்லையில் முள்ளியாறு வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது. மறுகரைக்கு ஏற்றிச் செல்லும் ஓடம் செலுத்துவோர் வெள்ளமிகுதி கண்டு ஓடத்தைக் கரையில் கட்டி விட்டுப் போயிருந்தனர். ஞானசம்பந்தர் ஓர் ஓடத்தை அவிழ்க்கச் செய்து அடியவர்களுடன் தானும் ஏறிக் கொள்ளம்பூதூர் இறைவனைப் போற்றிக் கொட்டமே கமழும் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். ஓடம் தானே மறுகரைக்கு ஞானசம்பந்தரை அழைத்துச் சென்றது.
வழிப் பயணம் தடை இல்லாமல் நிறைவு பெற
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[1]
கோட்டகக் கழனிக் கொள்ளம்பூதூர்
நாட்டு அகத்து உறை நம்பனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[2]
குலையின் ஆர் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர்
விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[3]
குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர்த்
தவள நீறு அணி தலைவனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[4]
கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர்
நின்ற புன்சடை நிமலனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[5]
ஓடம் வந்து அணையும் கொள்ளம்பூதூர்
ஆடல் பேணிய அடிகளை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[6]
ஆறு வந்து அணையும் கொள்ளம்பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[7]
குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர்
அரக்கனைச் செற்ற ஆதியை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[8]
பரு வரால் உகளும் கொள்ளம்பூதூர்
இருவர் காண்பு அரியான் கழல் உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[9]
நீர் அகக் கழனிக் கொள்ளம்பூதூர்த்
தேர் அமண் செற்ற செல்வனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[10]
கொன்றை சேர் சடையான் கொள்ளம்பூதூர்,
நன்று காழியுள் ஞானசம்பந்தன்
இன்று சொல் மாலை கொண்டு ஏத்த வல்லார், போய்,
என்றும் வானவரோடு இருப்பாரே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 13 Aug 2026 07:11:09 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group