சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

மாணிக்க வாசகர்   
திருவாசகம்  

8 -th Thirumurai   8.130  
திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு
பண் -  (திருக்கழுக்குன்றம் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/30 Thirukalukundrapathigam Thiruvasagam.mp3

Audio: https://sivaya.org/thiruvaasagam/30 Thirukalukundrapathigam Thiruvasagam.mp3

பிட்டு நேர்பட, மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே!
சட்ட நேர்பட, வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்;
சிட்டனே! சிவலோகனே! சிறு நாயினும் கடை ஆய வெம்
கட்டனேனையும் ஆட்கொள்வான், வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

[ 2]
பிட்டுக்கு மண் சுமந்த பெருந்துறைப் பெருமானே! உன் கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடைய நான் உன்னை அடைந்திலேன்; ஆயினும், நாயினும் கடைப்பட்ட என்னையும் ஆட்கொள்ளும் பொருட்டுத் திருக்கழுக்குன்றில் எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

Thevaaram Link  - Shaivam Link
திருக்கழுக்குன்றம் Sthala Pathigam
1.103   1 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தோடு உடையான் ஒரு காதில்-தூய
பண் - குறிஞ்சி   (திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
6.092   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   மூ இலை வேல் கையானை,
பண் - திருத்தாண்டகம்   (திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
7.081   7 -th Thirumurai   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கொன்று செய்த கொடுமையால் பல,
பண் - நட்டபாடை   (திருக்கழுக்குன்றம் வேதகிரியீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
8.130   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு
பண் -   (திருக்கழுக்குன்றம் )

This page was last modified on Thu, 13 Aug 2026 07:11:09 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group